மோடியின் தைரியமான சீர்திருத்த முடிவுகளால் வலிமை பெறும் இந்தியா..! முகேஷ் அம்பானி பாராட்டு..!

22 November 2020, 11:23 am
Mukesh_Ambani_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கையும் உறுதியும் தான் தேசத்தை உற்சாகப்படுத்தியதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

“அவரது தலைமையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட தைரியமான சீர்திருத்தங்கள் இந்தியாவின் விரைவான மீட்புக்கும், அடுத்த ஆண்டுகளில் விரைவான பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று அம்பானி கூறினார்.

பண்டிட் தீன்தயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகத்தின் (பி.டி.பி.யு) மாநாட்டு விழாவில் பேசிய முகேஷ் அம்பானி, “பிரதமர் மோடியின் உணர்ச்சி மற்றும் ஆற்றல்மிக்க தலைமை உலகத்தில் ஒரு புதிய இந்தியா தோன்றுவதை கவனிக்க வைக்கிறது. அவரது நம்பிக்கையும் உறுதியான செயல்பாடும் முழு நாட்டையும் உற்சாகப்படுத்தியுள்ளது” என்று கூறினார்.

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த நாட்களைப் பற்றி பேசுகையில், “பி.டி.பி.யு’வே பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பர் பார்வையின் ஒரு தயாரிப்பு தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். குஜராத் முதல்வராக இருந்தபோதும் அவரது பார்வை இது தான்” என்று எ=முகேஷ் அம்பானி கூறினார்.

ஆற்றலின் எதிர்காலம் முன்னோடியில்லாத மாற்றங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அம்பானி மேலும் கூறினார். பொருளாதார வல்லரசாகவும், பசுமை மற்றும் தூய்மையான ஆற்றல் வல்லரசாகவும் மாற இந்தியா இரண்டு இலக்குகளைத் தொடர வேண்டும் என்றார்.

21’ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், உலகம் இன்று பயன்படுத்தும் ஆற்றலின் இரு மடங்கு அளவை பயன்படுத்தும் என்று அம்பானி மேலும் தெரிவித்தார்.

“இந்த இலக்கை அடைய புதுப்பிக்கத்தக்க, குறைந்த கார்பன் வெளியீடு மற்றும் கார்பன் மறுசுழற்சி தொழில்நுட்பங்களில் புதிய கண்டுபிடிப்புகள் நமக்குத் தேவை. பச்சை மற்றும் நீல ஹைட்ரஜன் போன்ற புதிய எரிசக்தி ஆதாரங்களில் நமக்கு முன்னேற்றங்கள் தேவை. எரிசக்தி சேமிப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றில் நமக்கு பெரிய கண்டுபிடிப்புகள் தேவை” என்று அவர் கூறினார்.

1 thought on “மோடியின் தைரியமான சீர்திருத்த முடிவுகளால் வலிமை பெறும் இந்தியா..! முகேஷ் அம்பானி பாராட்டு..!

Leave a Reply