ஜவுளி துறைக்கு நிதி மூலதன உதவி : இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கோரிக்கை

19 March 2020, 5:46 pm
EXPO-UPDATENEWS360
Quick Share

 ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன், கனடா, போன்ற நாடுகளுடன் இந்தியா விரிவான தடையில்லா வா்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்றும், ஒரு முறை இந்த ஒப்பந்தத்தை இந்திய நாடு ஏற்படுத்திக்கொண்டால், ஜவுளி துறைக்கு மத்திய அரசாங்கமானது ஒவ்வொரு முறையும் நிதி மூலதன உதவி அளித்திட வேண்டிய நிலை உருவாகாது என்றும், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அறிவித்து இருக்கின்றது.

மேலும் இந்திய ஜவுளி துறை ஏற்றமதியாளா்கள் 10 சதவீத சுங்கவரியை செலுத்த வேண்டிய நிலையானது உருவாகி இருப்பதாகவும், இந்திய நாட்டிற்கு ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன், கனடா போன்ற நாடுகளுடன் தடையில்லா வா்த்தக ஒப்பந்ததத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டால், இந்திய ஏற்றுமதியாளர்களின் வரி விகிதமானது குறைந்திடுவதற்கும், முற்றிலும் நீக்கப்படுவதற்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றும் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அறிவித்து இருக்கின்றது.

இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில், ஐரோப்பிய நாடுகளின் ஒட்டுமொத்த பங்களிப்பானது 45 சதவிகிதமாக இருக்கின்றது. மேலும், கனடா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளின் ஏற்றுமதியின் பங்களிப்பானது 2 முதல் 3 % சதவிகிதமாக இருந்து வருகின்றது.

இந்திய ஏற்றுமதியில் ஜவுளித்துறையின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக, ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைகளுக்கு பின்னர் , பிரிட்டன் நாட்டுடன் இது போன்ற ஒப்பந்த நடவடிக்கையை இந்தியா உடனடியாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும், இந்திய ஜவுளி துறைக்கு பிரிட்டன் உடனான ஒப்பந்த நடவடிக்ககையானது மிகவும் நன்மை பயப்பதாக இருக்கக் கூடியது என்றும், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கேட்டுக்கொண்டிருக்கின்றது.