புல்லட் வாங்கனும்னு ஆசையா? வீடு தேடி வரும் ராயல் என்ஃபீல்டு.!!

31 July 2020, 10:45 am
Royal Enfield - Updatenews360
Quick Share

வாடிக்கையாளர்களின் வீடு தேடி வரும் புதிய திட்டத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வீஸ் ஆன் வீல்ஸ் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள விற்பனை மையங்களில் 800 மோட்டார் சைக்கிளில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மட்டும அனைத்து விநியோக மையங்களிலும் 81 சர்வீஸ் ஆன் வீல்ஸ் திட்டத்தை செயல்படுத்த ராயல் என்ஃபீல்டு தயார் நிலையில் உள்ளது. 80 சதவீதம் வரையிலான பழுது பார்க்க தேவையான உபகரணங்கள், உதிரிபாகங்களை இந்த மோட்டார் சைக்கிள்களில் கொண்டு செல்ல முடியும்.

இந்த சேவையை பெற நினைக்கும் வாடிக்கையாளர்கள் உடனே விநியோக மையங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும் எனெ அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.