எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு… அடிப்படை சேவைக் கட்டணங்களும் இன்று முதல் வசூலிப்பு…!!

Author: Babu Lakshmanan
1 July 2021, 10:37 am
SBI Case Arrest - Updatenews360
Quick Share

எஸ்பிஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் பணம் எடுப்பதில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

நாட்டிலேயே மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது வங்கிக் கிளைகளிலோ அல்லது ஏடிஎம் மையத்திலோ மாதத்திற்கு 4 முறைக்கு மேலாக பணம் எடுத்தால், அதன்பிறகு தேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படும் என முன்பே அறிவித்திருந்தது.

அதன்படி, எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திலோ அல்லது வங்கிக் கிளைகளிலோ இலவசமாக 4 முறை பணம் எடுக்கலாம்.

இந்த நிலையில், ஏடிஎம் கார்டு பயன்பாட்டிற்கு விதிக்கப்படும் கட்டணங்களை போலவே, காசோலை பயன்பாட்டிற்குக்கும் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆண்டிற்கு 10 காசோலைகளை இலவசமாக பயன்படுத்தி பணம் எடுத்துக் கொள்ள முடியும். அதற்கு மேல் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு காசோலைக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பபட்டுள்ளது. அதோடு, இனி புதிதாக காசோலை புத்தகம் வாங்கினால் ரூ.40 கட்டணம் வசூலிக்கும் முறையும் இன்று முதல் அமலுக்கு வந்ததுள்ளது. மூத்த குடிமக்களுக்கு இந்த கட்டணம் ஏதும் கிடையாது.

Views: - 1046

0

1