தொடங்கியவுடனேயே 443 புள்ளிகள் உயர்வு..! பட்ஜெட் தாக்கலால் ஜெட் வேகத்தில் உயர்ந்த இந்திய பங்குச் சந்தை..!

1 February 2021, 11:38 am
Sensex_UpdateNews360
Quick Share

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2021-22 தாக்கல் செய்யப்படும் நிலையில், வாரத் தொடக்கத்தில் பங்குச் சந்தை தொடங்கியவுடன் மும்பை பங்குச் சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 443 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை என்எஸ்இ நிஃப்டி 115 புள்ளிகளும் உயர்ந்துள்ளது. 

சென்செக்ஸ் தரவரிசையில், இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்.டி.எஃப்.சி, ஓ.என்.ஜி.சி, டைட்டன் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவை இந்த உயர்வின் மூலம் முக்கிய லாபத்தைப் பெற்றன.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை, சென்செக்ஸ் 588.59 புள்ளிகள் குறைந்து 46,285.77 ஆகவும், நிஃப்டி 182.95 புள்ளிகள் சரிந்து 13,634.60 புள்ளிகளாகவும் இருந்தது. முந்தைய ஆறு அமர்வுகளில், சென்செக்ஸ் 3,506.35 புள்ளிகள் இழந்துள்ளது. மேலும் நிஃப்டி 1,010.10 புள்ளிகள் இழந்துள்ளது. 

இந்நிலையில் கொரோனாவுக்கு பிந்தைய முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வதால் தொழில் துறைகளுக்கு அதிக சலுகைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் இருக்கும் என்பதால், காலை பங்குச் சந்தை தொடங்கியவுடனே ஜெட் வேகத்தில் பங்குகள் உயர ஆரம்பித்துள்ளன.  

இந்திய பங்குச் சந்தைகள் மட்டுமல்லாது ஆசியாவின் பிற இடங்களிலும், இன்று பங்குச் சந்தைகள் முன்னேற்றம் கண்டுள்ளன.

Views: - 41

0

0