கொரோனா வைரஸ் தாக்குதல் விளைவாக சீன உள் நாட்டு உற்பத்திக்கு பெரும் பாதிப்பா..? ஷாங்காய் அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஆய்வறிக்கை தகவல்..?!

9 February 2020, 9:33 am
shanghai-updatenews360
Quick Share

கரோனா வைரஸ் தாக்குதலின் காரணமாக, சீனாவில் இருக்கின்ற அமெரிக்க நிறுவனங்கள் தங்களின் 2020-ம் ஆண்டின் வருவாயில் நேரடியான தாக்கத்தை சந்திக்கும் என்று, அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தெரிவித்து இருக்கின்றது.

சீன நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்ற கரோனா வைரஸ் தாக்குதல் மூலமான தாக்கத்தில், 1,89,660 நபர்கள் தீவிரமான மருத்துவ கண்காணிப்பில் இருக்கின்றனர் என்றும், 27,657 நபர்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், சீன நாட்டின் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். நேற்றய தினமான, சனிக்கிழமை 6,101 நபர்களுக்கு, கொரோனா வைரஸ் தாக்குதலானது, கடுமையான வகையில் ஏற்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், இன்று காலையில், 2,050 நபர்கள் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டு இருப்பதாகவும் சீன நாட்டின் தகவல்கள் தெரிவிக்கின்றது.
கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தின் காரணமாக, சீன நாட்டிலுள்ள 87 % சதவிகித அமெரிக்க நிறுவனங்கள், 2020-ம் ஆண்டில், மிகப் பெருமளவில் வருவாய் இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றும், அமெரிக்கன் சேம்பர் ஆப் காமர்ஸ் அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது.

சீனாவின், ஷாங்காயில் அமைந்து இருக்கின்ற அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையில்,

சமீபத்திய கணக்கெடுப்பின் மூலமாக, தற்போது உருவாகி இருக்கின்ற கொரோனா வைரஸ் தாக்குதல் மூலமான நெருக்கடிகளின் காரணமாக, சென்ற ஆண்டை காட்டிலும், சீன நாட்டின் உள் நாட்டின் உற்பத்தியான, ஜி.டி.பி-யில், நடப்பு ஆண்டில்,2 சதவிகிதத்திற்கும் அதிகமான வீழ்ச்சி நிலையை, சந்திக்கின்ற சூழலானது ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றது.

சீன தேசத்தில் இருக்கின்ற அமெரிக்க நாட்டின் நிறுவனங்களின் 2020 வருவாயிலும் நேரடியான எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கும் வாய்ப்பு பெருமளவில் இருப்பதாகவும், அதன் காரணமாக, . சீனாவில் அமைந்திருக்கின்ற 87 சதவிகிதம் அமெரிக்க நாட்டின் வர்த்தக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும், 2020-ம் ஆண்டின் வருவாயில், பெருமளவிலான இழப்புகளை சந்திக்க வேண்டி வரும் என்றும், அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பானது செய்திகள் வெளியிட்டு இருக்கின்றது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலின் காரணமாக, 60 % சதவிகித அமெரிக்க நிறுவனங்கள், தனது பணியாளர்கல் அனைவரையும் வீட்டிலிருந்து பணியாற்ற கேட்டுக்கொண்டிருப்பதாகவும், சீனாவின், ஷாங்காயில் அமைந்து இருக்கின்ற அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ், தகவல்கள் தெரிவிக்கின்றது.