ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் முதலீடு..! சில்லறை விற்பனைச் சந்தையில் முற்றும் ஆதிக்கப் போர்..!

4 September 2020, 11:13 am
Reliance_Retail_UpdateNews360
Quick Share

தனியார் முதலீட்டு நிறுவனமான சில்வர் லேக் பார்ட்னர்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சில்லறை விற்பனையில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் சில்லறை விற்பனையில் மேற்கொள்ளப்படும் இந்த முதலீட்டின் மூலம், சுமார் 2% பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் விற்கும் என அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. மேலும் மொத்தமாக 10% பங்குகளை விற்று 57 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.

சில்வர் லேக் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. அதே நேரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் வெளியாகவில்லை.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் தனது சில்லறை வணிகத்தை ஒரு வல்லமைமிக்க சக்தியாக மாற்ற முயற்சி செய்து வருகிறது. இதற்காக சாத்தியமான முதலீட்டாளர்களை ஈர்த்து வேகமாக விரிவடைகிறது.

உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவின் சில்லறை விற்பனையில் பெரிய நிறுவனங்கள் நுழைய அனுமதி வழங்கப்பட்டதிலிருந்தே இந்த சந்தையைக் கைப்பற்ற பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. 

அமேசான், வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு ஆன்லைன் வணிக நிறுவனங்களும், பிளிப்கார்ட் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களும் இந்த சந்தையைக் கைப்பற்ற தீவிரமாக முயன்று வருகின்றன.

இதில் ரிலையன்ஸ் சற்று தாமதமாக களமிறங்கி இருந்தாலும், அதிகளவில் முதலீடுகளை ஈர்த்து கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, சில்லறை விற்பனைச் சந்தையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

Views: - 0

0

0