வங்கி கடன்களுக்கு ஓர் ஆண்டு விளக்கு : சுப்பிரமணியம் ஸ்வாமி – கோரிக்கை – ட்விட்டர் பதிவு

20 March 2020, 4:40 pm
SWAMI-UPDATENEWS360
Quick Share

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, அனைத்தும் முடங்கி இருக்கின்ற காரணத்தால், இந்திய அளவில் பலவிதமான தொழில்களும் முடங்கி இருக்கின்றது. குடிமக்கள் தாங்கள் வங்கிகளில் பெற்ற கடன்களை அடைப்பதிலும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும்.

மேலும், பொது மக்கள் தாங்கள் வங்கிகளில் பெற்ற , கடன்களை ஓராண்டு காலத்திற்கு ஒத்தி வைத்திட வேண்டும் என்றும், பா.ஜ.க-வின் மூத்த தலைவர், சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை வைத்து இருக்கின்றார்.

கொரோனா வைரஸ் தொற்றானது, உலக நாடுகள் அனைத்தையும் கடுமையான வகையில் பாதித்து இருக்கின்றது. அதன் காரணமாக, பொது மக்கள் ஒன்று கூடுவதைத் தடுத்திட வேண்டும் என்றும், மத்திய அரசாங்கம் அறிவுறுத்தி இருக்கினறது. மேலும், இந்தியா முழுவதிலும், பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரை அரங்குகள், போன்ற அனைத்தையும், மூடிடும்படியும் உத்தரவிட்டு இருக்கின்றது. சர்வதேச அளவிலும், இந்தியாவிலும், பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வகையில் முடங்கி இருக்கின்றது. .
போக்குவரத்து மற்றும் விமானச் சேவை போன்றவைகள் முடங்கிய காரணத்தால், ஏற்றுமதி வர்த்தகமானது கடுமையாகப் பாதித்து இருக்கின்றது.உலகம் முழுவதிலும் ஒருவரை சார்ந்து மற்றொருவர் இயங்குகின்ற காரணத்தால், சர்வதேச அளவில் தொழில்களில் முடக்கம் ஏற்பட்டு இருக்கினறது. வங்கிகளில் கடன் பெற்றவர்கள், தொழில் துறையினர்கள், கடன் வாங்கி இருக்கின்றவர்கள், கடன்களுக்கான தவணையை செலுத்துவோராகில் ஆகியோர் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்றும், பா.ஜ.க-வின் மூத்த தலைவர், சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். மேலும், அவர் தனது ட்விட்டர் பதிவில், கோவிட்-19 நெருக்கடி காரணமாக இந்திய வணிகம் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. . காரணங்கள் ஏதுமில்லாமல், நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்வதன் காரணமாக, ஊழியர்கள் தாங்கள் பெற்று இருக்கின்ற, வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்துவது என்பது இயலாது என்றும், தனது ட்விட்டரில் கறுத்தது தெரிவித்து இருக்கின்றார்.