இந்திய அளவில் குறைவான வேலையின்மை சதவீதம்..! உதவிய அரசின் தளர்வு நடவடிக்கைகள்..! நாலு கால் பாய்ச்சலில் தமிழகம்..!

3 September 2020, 12:34 pm
Unemployment_UpdateNews360
Quick Share

அரசாங்கத்தின் அன்லாக் 4 நடவடிக்கையின் மூலம் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் பொருளாதாரத்திற்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முன்பு, விவசாய நடவடிக்கைகளின் அதிகரிப்பு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளின் அதிகரிப்பு ஆகியவை தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதத்தை 2.6% ஆக குறைத்துள்ளது தரவுகள் மூலம் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி முதலான காலகட்டத்தில் ஆகஸ்ட் மாதம் மிகக் குறைவான நிலையை எட்டியுள்ளது மற்றும் அகில இந்திய வீதமான 8.3%’ஐ விட மிகக் குறைவாக உள்ளது.

தமிழகத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 70% பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சாகுபடிக்கு உட்பட்ட பகுதிகளில், விதைப்பு நடவடிக்கைகளில் வலுவான 29% அதிகரிப்பு கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்க உதவியது. 2019-20 முதல் 2020-21 வரை 2.7 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு அதிகரித்து 12 லட்சம் ஹெக்டேராக விவசாய பகுதி உயர்ந்துள்ளது.

“சரியான நேரத்தில் மழை சாகுபடிக்கு உட்பட்ட பகுதியை மேம்படுத்தியது. மிக முக்கியமான குருவை சீசன் நடவு பணிகள் தொடங்கியுள்ளன. இதன் வேகம் மேலும் தொடரும் என்று நம்புகிறோம்.” என்று ஒரு விவசாய பொருட்கள் சந்தைப்படுத்தல் அதிகாரி கூறினார்.

இந்தியாவில் தமிழகத்தை விட முன்னணியில் 1.9% வேலையின்மையுடன் குஜராத் மட்டுமே மிகக் குறைவான வேலையின்மை சதவீதத்தைக் கொண்டுள்ளது. இதற்கிடையே மகாராஷ்டிராவின் வேலையின்மை விகிதம் 6.2%’ஆக உயர்ந்தது. தமிழகத்தில் வேலையின்மை விகிதம் திறத்தல் வழிகாட்டுதல்களுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளது.

உதாரணமாக, ஏப்ரல் மாதத்தில் மாநிலம் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், வேலைவாய்ப்பு ​​விகிதம் 49.8%’ஆக இருந்தது. இது படிப்படியாக 8.1%’ஆக குறைந்தது ஜூலை மாதத்தில் அதிகமான வணிகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன.

மறுபுறம், வரவிருக்கும் திருவிழாவிற்கான சரக்குகளை உருவாக்க தொழிற்சாலைகள் ஆகஸ்ட் மாதத்தில் தங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கைகளை மேம்படுத்தின. சென்னை-ஸ்ரீபெரும்புதூர்-ஒரகடம் பகுதியில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து வாகன தொழிற்சாலைகளும் கொரோனாவுக்கு முந்தைய உற்பத்தி அளவை எட்டின.

மற்ற துறைகளும் மாநிலத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. “எங்கள் எட்டு தொழிற்சாலைகளும் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளன. கொரோனாவுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்டில் விற்பனை 92% ஆக இருந்தது. செப்டம்பர் மாதம் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பும்” என்று பாரிவேர் ரோகாவின் எம்.டி ரங்கநாதன் கூறினார்.

உற்பத்தித் தொழில்கள் மீண்டும் சூடு பிடித்துள்ளதால் ஒரு நபருக்கு 8,000 ரூபாய் செலவழித்து 35’க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பீகார் மற்றும் பிற இடங்களிலிருந்து பெரும்பாலான தொழிலாளர்களை நிறுவனங்கள் மீண்டும் அழைத்து வந்துள்ளன.

தற்போது அன்லாக் 4.0 கீழ், தமிழக அரசு பெரும்பான்மையான தளர்வுகளை வழங்கியுள்ளதால் செப்டம்பர் மாதத்தில் வேலையின்மை சதவீதம் இன்னும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0