இழப்பைச் சந்தித்த டாடா ஸ்டீல் நிறுவனம்.!!
17 August 2020, 11:07 amபிரபல எஃகு நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனம் முதல் காலாண்டில் இழப்பை சந்தித்துள்ளது.
எஃகு தயாரிப்பில் பிரபல நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.4,648.13 கோடி ஒட்டு மொத்த நிகர இழப்பை சந்தித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.24,481.09 கோடியாக இருந்தது.
இந்த வருவாய் கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ஒப்பிடும் ரூ.36,198.21 கோடி குறைவாகும். கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.714.03 கோடி நிகர லாபமாக பெற்றிருந்த நிலையில் வருவாய் சரிவால் நடப்பு நிதியாண்டில் நிறுவனத்திற்கு ஒட்டுமொத்தமாக ரூ.4,648.13 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதே போல நடப்பு நிதியாண்டில் நிறுவனத்தின் செலவினம் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.34,447.42 கோடியில் இருந்து ரூ.27,892.09 கோடியாக குறைந்தது என டாடா ஸ்டீல் நிறுவனம் மும்பை பங்குச்சந்தையிடம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.