கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக காணப்பட்டு வரும் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது..!
1 September 2020, 4:26 pmதங்கத்தின் மீதான தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் அதன் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது. இதனால், ரியல் எஸ்டேட், பங்கு சந்தை போன்றவற்றில் முதலீடு செய்வதை வாடிக்கையாளர்கள் குறைத்து வருகின்றனர்.
மேலும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தில் தங்கள் முதலீடுகளை செலுத்துவதில் ஆர்வம் காண்பிக்க தொடங்கியுள்ளனர். இதனால், தங்கம் விலை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்தது.
தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ. 4,964 ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.136 அதிகரித்து ரூ. 39,712 க்கும் வர்த்தகமாகிறது. இதேபோல, சென்னையில் ஒரு கிலோ வெள்ளி 2,300 உயர்ந்து ரூ.76,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.
0
0