வெளிச்சத்திற்கு வந்த தீப்பெட்டி.! வெளி மாநிலத்திற்கு விநியோகம்.!!

7 May 2020, 9:29 am
Kvp Match Box - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தீப்பெட்டி பண்டல்கள் அனுப்பும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பிரதான தொழிலாளாக இருப்பது தீப்பெட்டி தொழில் தான். தீப்பெட்டியை தொழிலலை நம்பி இப்பகுதியில் 2லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த வாரம் நிபந்தனைகளுடன் தீப்பெட்டி ஆலைகளை திறக்க அரசு உத்தரவு வழங்கியது. இதனை தொடர்;ந்து தீப்பெட்டி ஆலைகள் தீப்பெட்டி உற்பத்தியை தொடங்கியுள்ளது.

மேலும் 40 நாளுக்கு மேலாக தீப்பெட்டி பண்டல்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பமால் இருந்த உற்பத்தியாளர்கள், தற்பொழுது அனுப்ப தொடங்கியுள்ளனர். தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றுவதற்கு வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து லாரி டிரைவர்கள் வருவதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தூத்துக்குடி மாவட்ட எல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் முகாம் அமைத்து லாரி டிரைவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? வேறு எதுவும் தொந்தரவு உள்ளதா என்பது குறித்து சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் வாகனங்ளுக்கு கிருமி நாசினி தடுப்பு மருந்து தெளித்து வருகின்றனர். வெளி பகுதியில் இருந்து வரும் டிரைவர்கள் மற்றும் கீளினர்களுக்கு எவ்வித நோய் தொற்றும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றுவதற்கு கோவில்பட்டி நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மீண்டும் தீப்பெட்டி பண்டல்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கியுள்ளதால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகழ்ச்சி அடைந்துள்ளனர்.