20,000 கோடி வரி விதிப்பு..! இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வெற்றி கண்ட தொலைத்தொடர்பு நிறுவனம்..!

25 September 2020, 7:49 pm
Telecom_Company_UpdateNews360
Quick Share

தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் குழுமம் ரூ 20,000 கோடி வரிவிதிப்பு விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியாவிற்கு எதிராக வெற்றி கண்டுள்ளது.

இந்திய வருமான வரித் துறையின் நடத்தை நியாயமான மற்றும் சமமான செயல்பாடுகளை மீறுவதாக ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்ற தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

வோடபோன் மீது இந்திய அரசு வரிப் பொறுப்பை சுமத்துவது இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான முதலீட்டு ஒப்பந்தத்தை மீறுவதாக தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

வரி சர்ச்சைக்கு ஒரு நீதிபதியை இறுதி செய்வதில் கட்சிகளின் நடுவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாததால், தொலைதொடர்பு நிறுவனம் வோடபோன் 2016’இல் சர்வதேச நீதிமன்றத்தை (ஐ.சி.ஜே) அணுகியது.

வோடபோன் இந்தியாவின் ரூ 7,990 மூலதன ஆதாய வரிகளில் நெதர்லாந்து-இந்தியா இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தின் கீழ் வட்டி மற்றும் அபராதம் மொத்தமாக ரூ 22,100 கோடியாக இருந்தது.

இந்த தீர்ப்பு வந்தவுடன் மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா பங்குகள் 12 சதவீதம் உயர்ந்து ரூ 10.20 ஆக இருந்தது

Views: - 9

0

0