சரிவை சந்தித்த வோல்டாஸ் நிறுவனம்.!!
16 August 2020, 10:09 amடாடா குழுமத்தை சேர்நத் ஏசி தயாரிப்பு மற்றும் பொறியியல் சேவை நிறுவனமான வோல்டாஸ் சரிவை சந்தித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வோல்டாஸ் நிறுவனம் ரூ.81.77 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இந்த லாபம் கடந்த நிதியாண்டின் இதே காலண்டுடன் ஒப்பிடுகையில் 50.83 சதவீதம் சரிந்துள்ளது.
கடந்த 2019-20ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வோல்டாஸ் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.166.32 கோடியாக இருந்தது. மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் ரூ.2,637.27 கோடியில் இருந்து 49.41 சதவீதம் குறைந்து ரூ.1,364.34 கோடியாக இருந்தது.
கொரோனா பொதுமுடக்கத்தின் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருவதால் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் படிப்படியாக மீட்சியடைந்து வருவதாய வோல்டாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.