வழக்கம் போல் இயங்கிய எஸ் வங்கி : அனைத்து சேவைகளும் வழங்கப்படுகிறது

20 March 2020, 5:33 pm
YES-UPDATENEWS360
Quick Share

யெஸ் வங்கிக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வந்த காரணத்தால், வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்கத் துவங்கி இருக்கின்றது.

யெஸ் வங்கியின் நிதி நிலை மோசமடைந்த காரணத்தாலும், இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 5-ம் தேதியன்று யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. மேலும், ஏப்ரல்-3-ம் தேதி வரையிலும், யெஸ் வங்கி வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகையிலிருந்து, 50,000 ரூபாய்க்கும் மேலாக எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. மேலும், யெஸ் வங்கி மேற்கொண்டும், கடன் வழங்குகின்ற செயல்பாடுகளையும் இந்திய ரிசர்வ் வங்கி முடக்கி இருந்தது.

எஸ் வங்கியின் இயக்குநர்கள் குழுவை முற்றிலும், கலைத்துவிட்டு, பார்த்த ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான பிரசாந்த் குமாரை, தனது பிரதிநிதியாக இந்திய ரிசர்வ் வங்கி நியமனம் செய்து இருக்கின்றது.

யெஸ் வங்கி மீது, விதித்து இருக்கின்ற கட்டுப்பாடுகள் அனைத்தும், வருகின்ற மார்ச் 18-ம் தேதியன்று விளக்கப்படும் என்றும், இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கினறது. அதன் காரணமாக, நேற்று மாலை 6 மணி அளவில், யெஸ் வங்கி முழு அளவில் செயல்படத் துவங்கி இருக்கின்றது.

வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு இணைய தளம் மூலமாக, யெஸ் வங்கியின் அனைத்து சேவைகளையும் வழங்கி இருப்பதாகவும், யெஸ் வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றது