அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கு : வீடியோ ஆதாரங்களுடன் நாளை விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2022, 10:07 pm
Admk Office Seal CAse -Updatenews360
Quick Share

அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கை நாளை மதியம் 2:30 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கை அவசரமாக விசாரிக்க கோரிய நிலையில், இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்று வழக்கமான நடைமுறைப்படி விசாரணைக்கு வரும் என்று நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், அதிமுக அலுவலக சீல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, கட்சி அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதற்க்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், மொத்த இடத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது என தெரிவித்து இருந்தார்.

ஓ.பி.எஸ். கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கம்ப்யூட்டர், கோப்புகளை எடுத்துச் சென்றதாகவும், கட்சி விதிப்படி தலைமை நிலையச் செயலாளர்தான் தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளர் தலைமை நிலையச் செயலாளராக பொறுப்பில் நான் இருக்கிறேன், ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பி.எஸ். மனு தாக்கல் செய்ததே தவறு, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் கட்சி அலுவலகத்துக்கு உரிமை தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லாத போது சீல் வைக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு மனுவில் ஓபிஎஸ் கோரியுள்ளார். அதிமுக அலுவலகம் தனி நபர் சொத்து அல்ல என இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.

கட்சியின் பொருளாளர் என்ற முறையில் தலைமை அலுவலகம் சென்றேன்; அங்கே இ.பி.எஸ். ஆதரவாளர்கள் தடுத்தனர் கட்சி அலுவலகத்தில் நுழைய நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனை தொடர்ந்து அவரிடம் நீதிபதி சீல் வைத்த உத்தரவை எதிர்க்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா? கேள்வி எழுப்பினார். அதற்கு ஓபிஎஸ் தரப்பில், எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என பதிலளித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த வழக்கில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11-ஆம் தேதி காலை முதல் நடந்த சம்பவங்களை வீடியோ ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை நாளை மதியம் 2:30 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Views: - 406

0

0