ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவன்.. 2 நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் செய்த காரியம்… வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
28 May 2022, 9:49 am
Quick Share

திருவள்ளூர் அருகே இரண்டு தினங்களுக்கு முன் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாநில கல்லூரி மாணவர், நீதிதேவன் அதற்கு முன்னதாக சக நண்பர்கள் உடன் ஓடும் ரயிலில் சாகசம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது.

இரண்டு தினங்கள் முன்பாக மாநிலக் கல்லூரி மாணவர் நீதிதேவன் சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயிலில் வந்துகொண்டிருந்தார். அப்போது திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை – வேப்பம்பட்டு இடையே ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

அதற்கு முன்பாக ரயிலில் சக நண்பர்களுடன் இனைந்து அவர் சாகசம் செய்த பழைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து மாணவர்கள் பேருந்து ரயிலில் சாகசம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை மீறியும், மாணவர்கள் இதுபோன்ற சாகசத்தை மேற்கொண்டு உயிரிழப்பது வேதனை அடையச் செய்துள்ளது.

Views: - 477

0

0