உன் புருஷன இனி நடிக்க சொல்லாத…வாரிசு குடும்பத்தில் குளறுபடி…!
Author: Selvan2 February 2025, 12:57 pm
அண்ணனை போல வரலாம்னு நினைச்ச நடிகருக்கு கடைசியில் ஆப்பு
பிரபல பழைய நடிகர் 80,90-களில் காதல் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.தன்னுடைய மகன்களை எப்படியாவது சினிமாவில் பெரிய ஆளாக மாற்ற வேண்டும் என நினைத்த போது,திடீரென உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் மூத்த மகன் எப்படியாவது சினிமாவில் போராடி ஓரளவுக்கு பெயர் சொல்லும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.தற்போது பல படங்களில் நடித்தும் வருகிறார்.நடிகரின் இரண்டாவது மகனும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டினார்,இதனால் தன்னுடைய மாமனாரை தயாரிப்பாளராக இறக்கி படத்தை எடுத்து முடித்தார்.
இதையும் படியுங்க: உங்க மனைவியை கழட்டி விடுங்க…மக்கள் நடிகருக்கு நூல் விடும் பிரபல நடிகை…!
பிரபல தயரிப்பாளரான அவர் ஏற்கனவே சில படங்களில் தோல்வியால் நஷ்டத்தை சந்தித்து வந்த சூழலில்,தன்னுடைய மருமகனை வைத்து படம் இயக்கி மிகப்பெரிய அளவில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்தினார்.படத்தில் ஹீரோயினியாக பிரம்மாண்ட இயக்குனரின் மகள் நடித்தார்,படம் காதல் படமாக உருவாகி திரையில் ரிலீஸ் ஆனது,கடும் போட்டிக்கு மத்தியில் தைரியமாக வந்த வாரிசு நடிகரின் படம் சுத்தமாக ஓடாமல் இருந்த இடம் தெரியாமல் போனது,இதனால் தன்னுடைய மருமகனால் பெரும் நஷ்டத்தை சந்தித்த பிரபல தொழிலதிபர் மகளிடம் சென்று,இனி உன் புருஷனை படத்தில் நடிக்க சொல்லாதே என காரசாரமாக கூறியுள்ளார்.
நடித்த முதல் படமே தோல்வி அடைந்ததால் இனி பிரபல நடிகரின் மகனுக்கு பட வாய்ப்புகள் வர கம்மி என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.