ஐஸ்வர்யா தத்தாவுக்காக ‘மக்கள் செல்வன்’ செய்த காரியம் – இந்த வீடியோவை பாருங்க!

8 November 2019, 7:52 pm
Aishwarya dutta- updatenews360
Quick Share

தமிழ் திரையுலகில் ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இதனையடுத்து ‘பாயும் புலி, ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ போன்ற படங்களில் நடித்திருந்தார்.

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ சீசன் 2-வில் ஐஸ்வர்யாவும் ஒரு போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஐஸ்வர்யா தத்தாவின் கால்ஷீட் டைரியில் மஹத்தின் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’, ஆரியின் ‘அலேகா’, ‘கன்னித்தீவு’ மற்றும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என நான்கு படங்கள் இருக்கிறது.

இதில் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தில் ஹீரோவாக அர்ஜுமன் நடிக்கிறார். இந்த படத்தை விஜய் ஸ்ரீ இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், படத்தின் மோஷன் போஸ்டரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

Leave a Reply