மாஸ்டர் படத்தை லீக் செய்த டிஜிட்டல் நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்!!

19 January 2021, 8:23 pm
Quick Share

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி திரைக்கு வந்த படம் ‘மாஸ்டர்’. திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று உலகெங்கும் வசூலைக் குவித்து வருகிறது.

இத்திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக 11-ம் தேதி இரவு படத்தின் காட்சிகள் சிறிது சிறிதாக சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்தன. படத்தின் காட்சிகள் எப்படி கசிந்தது என்று தயாரிப்பாளர் குழு விசாரணை நடத்தியதில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக படத்தை டிஜிட்டல் நிறுவனம் ஒன்றிடம் கொடுத்து இருந்தபோது அங்கு வேலை செய்யும் ஒரு ஊழியர் படத்தை சட்டவிரோதமாக கசிய விட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் அந்த டிஜிட்டல் நிறுவனத்திடம் ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.80 கோடியைத் தாண்டியுள்ள ‘மாஸ்டர்’, விரைவில் உலக அளவிலான வசூலில் ரூ.200 கோடியையும், தமிழகத்தில் ரூ.100 கோடியை தாண்டும் என தயாரிப்பாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0