100 மில்லியனை கடந்த “காட்டுப்பயலே” பாடல்..சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி..!
Author: Rajesh22 January 2022, 2:27 pm
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் சூரரைப் போற்று.
இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி, நடித்திருந்தார்.
2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘காட்டுப்பயலே’பாடல் யுடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. பாடலாசிரியர் சினேகன் எழுதியுள்ள இந்தப் பாடலை பின்னணி பாடகி தீக்ஷிதா வெங்கடேஷன் பாடியுள்ளார்.
யுடியூபில் இதுவரை 30க்கும் மேற்பட்ட தமிழ் பாடல்கள் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அதிக பார்வையாளர்களை கொண்ட பாடலாக தனுஷின் ரவுடி பேபி பாடல். 1300 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.