பட்டயக் கிளப்பும்’அண்ணாத்த’ … தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல்முறை : வெளிநாட்டில் அதிக திரையரங்குகள்… கொண்டாடும் தலைவர் ரசிகர்கள்…!!!
Author: Babu Lakshmanan2 November 2021, 6:37 pm
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
இதற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.
வெளியான பாடல்களும் லைக்ஸ்கள், பார்வையாளர்கள் என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ பெற்றுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 1,119 திரையரங்குகளில் வெளியாகிறது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 572 திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், அண்ணாத்த படத்தின் 3வது பாடலான மருதாணி என்னும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இது ரஜினி ரசிகர்களிடையே, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
2
0