தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகியான சுஜாதா மோகன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி பல்வேறு மொழிகளில் ஏறத்தாழ 4000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ள சுஜாதா 1981 ஆம் ஆண்டு கிருஷ்ணா மோகன் என்ற டாக்டரை திருமணம் செய்துக்கொண்டார்.
அதன் பின்னர் 1986ம் ஆண்டு சுவேதா மோகன் என்ற மகள் பிறந்தார்.
இந்நிலையில் தனது கடந்த கால அனுபவங்களை குறித்து பேட்டி ஒன்றில் கூறிய சுஜாதா மோகன். தன் மகள் ஸ்வேதா பிறப்பதற்கு முன்னர் நான் பாடல் பாடுவதில் பிசியாக அங்கும் இங்கும் அலைந்து வேலை பார்த்தேன். அதனால் இரண்டு குழந்தைகள் கருவிலே கலைந்துவிட்டது. அதன் பிறகு பிறந்தவர் தான் ஸ்வேதா.
அவள் குழந்தையாக இருந்தபோது கூட நான் வேலை வேலை என ஓடியால் சரியாக பார்த்துக்கொள்ளமுடியவில்லை. ஸ்வேதா ஸ்கூல் படிக்கும்போது பள்ளி விழாக்களுக்கு கூட என்னால் போகமுடியாது. அவள் அதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டிருக்கிறாள். அதனால். இப்போது நானும் என் கணவரும் எங்கள் பேத்தியை நன்றாக கவனித்து பார்த்துக்கொள்கிறோம். ஸ்வேதா வெளிநாடுகளுக்கு பாடல் பாட சென்றால் பேத்தியை பள்ளிக்கு அழைத்து செல்வது போன்ற வேலைகள் எல்லாம் நான் தான் பார்த்துக்கொள்வேன் என கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.