“ஏய்.. மருமகளே.. ஃபீல் பண்ணாத” – மருமக பொண்ண விட, அத்தை சின்ன பொண்ணா இருக்கு….!

9 May 2021, 10:17 am
Quick Share

சமீப நாட்களில் தினமும் காலையில் ஒரு இரங்கல் செய்தியில் விழிக்க நேரிடுகிறது. இத்தகைய எதிர்மறையான காலகட்டத்தில் மேலும் நம் மனதை புண்படுத்த ஒரு வீடியோ கடந்த சில நாட்களாக ட்ரெண்டிங்கில் உள்ளது. அது என்னவென்றால் கிட்டத்தட்ட 13 வயது உள்ள குட்டி வடிவேலு என்னும் சிறுவன், சோபி என்னும் சிறுமி வீடியோ காலில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கண்ணா பின்னான்னு வைரலாகியுள்ளது. இந்த உலகத்தில் யார் யாரெல்லாம் ட்ரெண்ட் ஆக்க வேண்டுமென்று ஒரு விவஸ்தை இல்லாமல் இதையெல்லாம் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

குட்டி வடிவேலுவின் அத்தை பெண்ணுடன் சேர்ந்து டூயட் பாடி இன்ஸ்டாகிராமில் பிரபலமான இவர் சமீபத்தில் கண்ணீர் விட்டு அழுவது போலவும் அதனை கண்ட அவரது அத்தைப்பெண் “அவரை அழவேண்டாம்ன்னு சொல்லுங்க அத்தை.. எனக்கு கஷ்டமா இருக்கு..” என்று பதிலுக்கு 90’s கிட்ஸை வெறுப்பேற்றும் வகையில் பேசி வருவதை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

இந்நிலையில், அழுத அந்த பெண்ணை அழாத மருமகளே.. ஏய் மருமகளே.. அதெல்லாம் ஃபீல் பண்ணாதிங்க.. என்று கெஞ்சிய அத்தையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. “பொண்ண விட சமாதான படுத்த வந்த அத்தை சின்ன பொண்ணா இருக்கு பா” என்று 90ஸ் கிட்ஸ் புலம்பி வருகிறார்கள்.

Views: - 453

11

0