ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற 366 படங்களின் பட்டியலில் இடம் பிடித்த சூரரைப் போற்று!

26 February 2021, 3:31 pm
Quick Share

ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற 366 படங்களின் பட்டியலில் சூரரைப் போற்று படமும் இடம்பிடித்துள்ளது.
பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோரது நடிப்பில் கடந்தாண்டு ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக திரைக்கு வந்த படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி சூரரைப் போற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.


சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலமாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சூர ரைப் போற்று படத்தில் சூர்யாவுடன் இணைந்து பரேஷ் ராவல், ஊர்வசி, கருணாச், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, பூ ராமு, மோகன் பாபு, ஞானசம்பந்தம் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. அப்படியிருந்தும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது.


சமீபத்தில், இந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. ஏன் இந்தக் காட்சிகளை எல்லாம் நீக்கப்பட்டது என்று கேள்வி கேட்கும் அளவிற்கு அந்தக் காட்சிகள் அமைந்துள்ளன. இந்த நிலையில், சூரரைப் போற்று படம் ஆஸ்கர் விருது பெறும் படங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கொரோனா காரணமாக சில மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் பட்டியலில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.


அதன்படி, ஆஸ்கர் விருது பெறும் 366 படங்களின் பட்டியலில் சூர்யாவின் சூரரைப் போற்று படமும் இடம் பெற்றுள்ளது. ஆனால், இந்தப் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா? கிடைக்காதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்தப் படத்திற்கு மட்டுமல்லாமல், சூரரைப் போற்று படத்திற்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் பட்டியலில் சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் இணைந்துள்ளனர்.

Views: - 1

3

0