40 வருடமாக முதல் மனைவியின் நியாபகத்திலே வாழும் பாக்யராஜ் – வெளியான ரகசியங்கள்!

Author: Shree
25 March 2023, 11:14 am
bakrayaraj
Quick Share

தமிழ் சினிமாவில் 70 காலத்தில் மும்மணி இயக்குனராகவும் நடிகராகவும் ரசிகர்களை கவர்ந்தவர் கே. பாக்யராஜ் தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர் , திரைக்கதை அமைப்பாளர் , இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர், நிகழ்ச்சி நடுவர் இப்படி பல கலைகள் கொண்டிருப்பவர் பாக்யராஜ்.

16 வயதினிலே படத்தில் உதவியாளராக பணியாற்றி தனது திரை வாழ்க்கையை துவங்கினார். பின் பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் உதவி இயக்குனர் மற்றும் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார்.

பாரதிராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் அவரது ரோல் மக்கள் மனதில் நின்றது. அவர் அவர் பேசிய வசனமும் அவரே எழுதியது தான். அதன் பின்னர் புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாகவே அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவரது முந்தானை முடிச்சு திரைப்படம் இன்றும் மக்களை டிவி முன்பு அமரவைக்கும். இவர் துணைக்கதாபாத்திரங்களில் நடித்து வந்த “பிரவீணா” என்னும் நடிகையை 1981ம் ஆண்டு மணந்தார்.

இரண்டு வருட மண வாழ்க்கைக்குப் பிறகு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்காது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மனைவி இறந்த சோகத்தில் மீள முடியாமல் இருந்த பாக்யராஜுக்கு குடும்பத்தினர் மீண்டும் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து வைத்தனர்

இரண்டாம் திருமணம் ஆகி 40 வருடமாகியும் பாக்யராஜ் இன்னும் தன் முதல் மனைவியை மறக்கவில்லையாம். அவர் போட்டுவிட்ட மோதிரத்தை இன்னும் தன் கையில் அணிந்திருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் அவரது அலுவலத்தில் இறந்த மனைவியின் புகைப்படத்தை வைத்து சாமி குமிட்டு வருகிறாராம். மனைவி இறந்து 42 வருடங்கள் ஆகியும் இன்னும் அதே காதலோடு இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

Views: - 100

0

0