தலைவருக்கு அப்புறம் தான் உதய சூரியன் – சூசகம் பேசும் #45YearsOfRajinismCDP

9 August 2020, 6:58 pm
Quick Share

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் அட பாட்டு வரியில்லைங்க உண்மை அது தான் இன்று இந்தியாவிலேயே சூப்பர் ஸ்டார் என்றால் எல்லோருக்கும் தெரியும். அவர் நடை, பேச்சு, ஸ்டைல் எல்லாமே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்து இழுக்கக் கூடியது.

இந்த உலகத்துல நல்லவான வாழுறது ரொம்ப கஷ்டம், அதும் பணம் பேரு புகழ் வந்த அப்பறம் நல்லவனா வாழுறது அத விட கஷ்டம். ஆனா எல்லாமே தேவைக்கு அதிகமாக கிடைச்ச அப்பறமும் ஒரு மனுஷன் நல்லவரா எளிமையானவரா அன்பனவரா இருக்காருனா அது தலைவர் ரஜினி மட்டுமே.

போட்டிக்கு எதிரில் நிற்கும் ஆட்கள் வேண்டுமானால் மாறிக்கொண்டே இருக்கலாம் ஆனால் 1975-லேந்து ஒரே ரஜினிதான் ! ஒரே சந்திரன்தான் ! ஒரே சூரியன்தான் ! ரஜினிகாந்த் ஏன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தாக இருக்கிறார் என்றால் அவர் இன்னும் தனது கடந்தகாலத்தை மறக்காத சிவாஜி ராவ் ஆக இருப்பதால்தான்.

இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் உருவாக்கியுள்ள 45 வருட ரஜினியிசம் காமன் dp-யில் பல டீட்டெயிலிங் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமாக ரஜினியின் கையில் அணிந்துள்ள காப்பில் “NOW or NEVER” என்ற வாசம் இடம் பெற்றுள்ளது.

மேலும், ரஜினிக்கு பின்னால் ஒரு சூரியன் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு பின்னால் தான் உதய சூரியன் என்று குத்தி காட்டியுள்ளனர் அவரது ரசிகர்கள்.

“ஆறிலிருந்து அறுபதுவரை ” இது நீங்கள் நடித்த பட பெயர் மட்டும் அல்ல, உங்களை விரும்பும் மக்களின் வயதும்தான். பூரண ஆரோக்யம் கொண்டு அகவை 100 உம் தாண்டி இதே 6 முதல் 60 வரை உள்ள மக்கள் உங்களை எப்போதும் கொண்டாட UPDATES NEWS 360 TEAM சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா !

Views: - 11

0

0