2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக சினேகா தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.
இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.
இந்நிலையில், சினேகா மீது என்ன கோபமோ தெரியவில்லை, பிரபல இயக்குனர்கள் நல்லது செய்கிறேன் என்ற பெயரில் கவர்ச்சியாக காட்டி அவருடைய மார்க்கெட்டை சரித்து விட்டனர்.
நான் அவன் இல்லை:
இயக்குனர் செல்வா இயக்கத்தில் ஜீவன் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் நமிதா, மாளவிகா, ஜோதிமயி, கீர்த்தி சாவ்லா, தேஜாஸ்ரீ இவர்களுடன் சினேகாவும் கதாநாயகியாக நடித்து இருப்பார். நான் அவன் இல்லை படத்தில் பல பெண்களை நம்ப வைத்து ஏமாற்றும் ஜீவன் மீது சினேகா காதல் கொள்வது தான் கேவலத்தின் உச்சம் என்று சொல்லலாம். இந்தப் படத்தில் நடிப்பதற்கு எப்படி சினேகா ஒத்துக்கொண்டார் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.
இதனிடையே, நான் அவன் இல்லை படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பு வெளியான சினேகாவின் படங்கள் அனைத்தும் இவரை மிகவும் கண்ணியமான கதாநாயகியாகவே காட்டியது, ஆனால் நான் அவன் இல்லை படத்தில் நான்கு ஐந்து பெண்களை காதலித்து ஏமாற்றிய குற்றவாளியை சினேகா உருக உருக காதலிப்பது போல் காட்டி அவருடைய மார்க்கெட்டை சரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.
புதுப்பேட்டை:
புதுப்பேட்டை படத்தில், செல்வராகவன் இயக்கத்தில் அதிரடி ரவுடிசம் கதைகளை கொண்ட படம். புதுப்பேட்டை படத்தில் சினேகாவிற்கு செல்வராகவன் விலைமாது கதாபாத்திரத்தை கொடுத்து அவருடைய மார்க்கெட்டை சரித்தது மட்டுமல்லாமல் ஹோம்லி நடிகையாக இருந்த சினேகாவை டார்ச்லைட் ஆக மாற்றிவிட்டார். ஆனால் தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுப்பேட்டை படம் ஒரு ஆக்சன் ஹீரோ அந்தஸ்தை கொடுத்த அதேசமயத்தில், கதாநாயகியாக பல படங்களில் ஹோம்லி கேரக்டரில் நடித்த சினேகா, இதில் விலைமாதுவாக மாறி ரசிகர்களை திணறடித்தார் என்பது நிதர்சனமான உண்மை.
பாண்டி:
ராகவா லாரன்ஸ் நடிப்பில் ராசு மதுரவன் இயக்கத்தில் குடும்ப திரைப்படமாக வெளியான பாண்டி படத்தில் புவனா என்ற கேரக்டரில் புல்லரிக்க வைக்கும் அளவுக்கு சினேகா கவர்ச்சியை தூக்கலாக கொடுத்து இருப்பார். பாவாடை தாவணியில் எவ்வளவு கிளாமர் காட்ட முடியுமோ அவ்வளவையும் குறை வைக்காமல் காட்டி இருப்பார். அதிலும் தோழியின் திருமணத்தில் குடித்துவிட்டு கும்தாவாக ஒரு ‘குத்து மதிப்பா’ என்ற பாடலில் செம குத்தாட்டம் போட்டு இளசுகளை திணறடித்தார் புன்னகையரசி.
கோவா:
கோவா படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் பல கதாநாயகிகளில் ஒருவராக சினேகாவும் நடித்து இருப்பார். இதில் வைபவ் உடன் சினேகா செய்த அழிச்சாட்டியம் கொஞ்சம் நஞ்சம் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். கடற்கரை மணலில் உருண்டு புரளும் காட்சி எல்லாம் ஏடாகூடமாகவும், கண் கூசும் வகையிலும் இருக்கும். கிளாமர் தூக்கலான உடையில் கோவா படத்தில் சினேகா கவர்ச்சி நடிகையாகவே வலம் வந்து அவருடைய ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாது குறிப்பிடத்தக்கது.
வசீகரா:
வசீகரா படத்தில் செல்வ பாரதி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்து இருப்பார். இந்த படத்தில் ஏற்கனவே நிச்சயமாகி திருமணத்திற்கு தயாராக இருக்கும் மணப்பெண்ணான சினேகா நடித்து இருந்தார், வீட்டிற்கு கல்யாணத்திற்காக உதவி செய்ய வந்த விஜய்யை காதலித்து அற்பத்தனமாக சினேகா அவர் மீது ஆசைப்படும்படியாக நடித்து இருப்பார். அப்போது இவர்களுக்கிடையே நடக்கும் காதல் லீலை பார்ப்பதற்கு கண் கூசும் வகையில் இருக்கும். முன்னதாக, எப்போதுமே காதலன் தான் காதலி பின்னாடி துரத்தி துரத்தி காதலிப்பார். ஆனால் இந்த படத்தில் சினேகா விஜய்யை உருகி உருகி காதலித்தது அவர் மீது இருந்த இமேஜை குறைத்து விட்டது என்று சொல்லாம்.
இவ்வாறாக இந்த ஐந்து இயக்குனர்கள் தான் தங்களுடைய படங்களில் சினேகாவை கவர்ச்சி புயலாக காட்டி அவருடைய மார்க்கெட் சரிவதற்கு காரணமாக அமைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல செல்வராகவன் ஒரு படி மேலே சென்று விலை மாதுவாக அவரை காட்டியதுதான் ரொம்ப மோசம் என்று ரசிகர்கள் அப்போதே புலம்பி தள்ளினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.