தமிழுக்கு சூரரைப் போற்று, மண்டேலா.. மலையாளத்துக்கு அய்யப்பனும் கோஷியும்… தேசிய விருதுகளை அள்ளிய தென்னிந்திய படங்களும், பிரபலங்களும்..!!

Author: Babu Lakshmanan
22 July 2022, 5:25 pm
Quick Share

2020ம் ஆண்டுக்கான சிறந்த படம், நடிகர், நடிகை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய சினிமா துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர்கள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2020-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31ம் தேதி வரையில் சென்சார் செய்யப்பட்ட படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

2020-ல் ஏற்பட்ட கொரோனா தொற்றால், 8 மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால், பல படங்கள் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டன. சில படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின. இதற்கிடையே 2020-ம் வருடம் 30 மொழிகளில் 295 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டன.

இந்நிலையில், தமிழில் சூரரைப்போற்று திரைப்படம், சிறந்தப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகியப் பிரிவுகளில் மொத்தம் 5 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. இயக்குநர் வசந்தின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களுக்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருதும், சிறந்த எடிட்டிங்கிற்கான விருதும், சிறந்த சப்போர்டிங் நடிகைக்கான விருதும் கிடைத்துள்ளது.

சிறந்த வசனத்திற்காக மண்டேலா படத்தின் இயக்குநர் மடோனா அஸ்வினுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அவருக்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகருக்கான 68வது தேசிய திரைப்பட விருது ஐயப்பனும் கோஷியும் என்ற மலையாளப் படத்திற்காக பிஜு மேனனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே படத்தில் பாடலை பாடிய நஞ்சம்மாவுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த இயக்குநருக்கான விருதை கேஆர் சச்சிதானந்தம் தேர்வு செய்யப்பட்டுள்ளா

அதேபோல,திரைப்படங்கள் தொடர்பான சிறந்த புத்தகமாக அனூப் ராமகிருஷ்ணன் எழுதிய மலையாள புத்தகத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இசையமைப்பாளராக விஷால் பரத்வாஜ் தேர்வு

சிறந்த வர்ணனை விருது ஷோபா தரூர் சீனிவாசனுக்கு வழங்கப்படுகிறது ; சிறந்த ஒளிப்பதிவாளர் ஷப்டிகுன்ன களாப்பா தேர்வு

ஓ தட்ஸ் பானு திரைப்படத்திற்காக இயக்குநர் ஆர்.வி. ரமணிக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிப்பு

திரைப்படங்கள் எடுக்க உகந்த மாநிலமாக மத்தியப்பிரதேசம் தேர்வு

சிறந்த புலனாய்வு பிரிவு படமாக சேவியர் பிரிகேடியர் ப்ரீதம் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

சிறந்த கல்விசார் திரைப்படமாக ட்ரீமிங் ஆப் வேர்ட்ஸ் என்ற மலையாளப் படம் தேர்வு

சிறந்த சமூக விழிப்புணர்வு படமாக இந்தியில் ஜேடிஜேடி படமும், பெங்காலியில் த்ரீ சிஸ்டர்ஸ் படமும் தேர்வு

மலையாள மொழியில் வாங்கூ-வுக்கும், மராத்தி மொழியில் அவன்சித் படத்திற்கும் சிறப்பு ஜூரி விருதுகள் அறிவிப்பு

Views: - 543

0

0