7ஜி ரெயின்போ காலனி கதிர் இப்படி மாறிட்டாரா? இணையத்தில் வைரலாகும் ரவிகிருஷ்ணா புகைப்படம் !

Author: kavin kumar
13 August 2021, 7:27 pm
Quick Share

செல்வராகவன் – யுவன் கூட்டணியில் ரசிகர்களின் மாபெரும் பாராட்டை பெற்ற படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தின் பாடல்கள் இன்னமும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ரவி கிருஷ்ணா. தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னத்தின் மகனான இவருக்கு முதல் படமே செல்வராகவன் உடன் அமைந்தது.

அந்த படத்தையும் இவரது தந்தை ஏ. எம் ரத்னம் தயாரித்தார். வெளிநாட்டில் படிப்பை முடித்து பக்கா மாடர்ன் பையனாக இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே எதிர்பாராமல் நடந்தது என சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததற்கு சிறந்த ஆண் அறிமுகம் பிலிம்பேர் செளத் விருது வாங்கினார்.

அதன்பின், தமன்னா, இலியானாவுடன் கேடி, பொன்னியின் செல்வன், ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் சொல்லிக் கொள்ளுமளவு ஓடவில்லை. கடைசியாக இவர் நடித்த ஆரண்ய காண்டம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன்பின் பீல்டு அவுட் ஆன ரவிகிருஷ்ணா, மும்பையில் செட்டிலாகி விட்டார். இந்நிலையில், தன் முதல் படத்தில் உடன் நடித்த சோனியா அகர்வாலை எதிர்பாராமல் சந்தித்த போது இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தற்போது அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Views: - 1936

38

17