“அப்படியே முத்தையா முரளிதரன் மாதிரியே இருக்காருயா” – விஜய் சேதுபதியின் 800 படத்தின் Motion Poster இதோ !

Author: Udayaraman
13 October 2020, 7:14 pm
Quick Share

பாலிவுட்டில் கதை கிடைக்கவில்லை என்றால் பயோபிக்கை Pick செய்து விடுவார்கள். இதனால் வருஷா வருஷம் பல பயோபிக்குகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதிலும் நம்ம கிரிக்கெட் வீரர்களுக்கான பயோபிக்குகளுக்கு ஏகபட்ட Demand. தோனி, சச்சின், அசாருதின், தற்போது கபில் தேவ் என்று பயோபிக்கள் லிஸ்ட் நீண்டுகொண்டே வருகிறது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை 800 என்று படமாக்கப்படுகிறது. இதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை மூவி ட்ரெயின் மோஷன் பிக்ச்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. விக்ரம் வேதா புகழ் சாம் c.s. இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து ஈழ தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. என்னதான் இவ்வளவு பிரச்சனை இருந்தாலும், இந்த மோஷன் போஸ்டரை பார்த்த மக்கள், “அப்படியே முத்தையா முரளிதரன் மாதிரியே இருக்காருயா” என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள் .

Views: - 45

0

0