90’s பிரபலங்கள் இணையும் புத்தம் புது வெப் சீரியஸ் : கவிதாலயாவின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 November 2021, 6:22 pm
Kavithalaya -Updatenews360
Quick Share

முன்னணித் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா நிறுவனம், வெப் சீரிஸ் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது.

தமிழ்த் திரையுலகோட முன்னணி இயக்குநரான பாலசந்தர் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் தான் கவிதாலயா. 1981வது வருஷம் எஸ்.பி.முத்துராமனோட இயக்கத்தில ரஜினி நடிப்பில வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தின் மூலமாகதான் கவிதாலயா நிறுவனம் தயாரிப்பில் இறங்குனாங்க.

தமிழ் மட்டுமல்ல கன்னட படங்களையும் இந்த நிறுவனம் தயாரிச்சாங்க. தமிழ்ல வெளியான ‘மணல் கயிறு’, ‘நான் மகான் அல்ல’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘சிந்து பைரவி’, ‘புன்னகை மன்னன்’, ‘வேலைக்காரன்’, ‘புதுப்புது அர்த்தங்கள்’, ‘அண்ணாமலை’, ‘ரோஜா’, ‘முத்து’, ‘சாமி’, ‘திருமலை’, ‘ஐயா’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரிச்சிருந்தாங். கடைசியா பேரரசு இயக்கத்தில் அர்ஜுன் நடித்த ‘திருவண்ணாமலை’ படத்தை 2008-ம் ஆண்டு தயாரிச்சிருந்தாங்க.

Kavithalayaa Logo & Animation on Behance

படத் தயாரிப்பு மட்டுமல்லிங்க, டிவி சீரியல்களையும் கவிதாலயா நிறுவனம் தயாரிச்சது. தூர்தர்ஷன் பொதிகை முதல் சன் டிவி, விஜய் டிவி ராஜ் டிவிகளுக்கு பல நாடகங்களை தயாரிச்சு கொடுத்தாங்க. கடைசியா 2009வது வருஷம் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்காக ‘சொல்லத்தான் நினைக்கிறேன்‘ங்கற நாடகத்தை தயாரிச்சிருந்தாங்க.

அதுக்கப்பறம் 9 வருசத்துக்கு பிறகு, டிஜிட்டல் யுகத்திலும் முதல் அடி எடுத்து வைச்சது நம்ம கவிதாலயா நிறுவனம்தாங்க. ‘ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்’ என்ற தொடரை அமேசான் நிறுவனத்துக்காக 2018-ம் ஆண்டு தயாரிச்சிருந்தாங்க.

Best web designing companies Chennai | Best Mobile Application Developers

இதுக்கப்பறம், ‘டைம் என்ன பாஸ்’ என்ற பெயரில் ஒரு வெப் சீரிஸ் உருவாக்கியிருந்தாங்க. இதுல பரத், ப்ரியா பவானி சங்கர், அலெக்ஸாண்டார் பாபு, சஞ்சனா சாரதி, ரோபோ ஷங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் இந்த வெப் சீரிஸில் நடிச்சிருந்தாங்க. ரசிகர்களை கவர்ந்த டைம் என்ன பாஸ் சீரியஸ் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாச்சு.

இப்போ புத்தம் புது வெப் சீரியஸை தயாரிக்க போறாங்க கவிதாலயா நிறுவனம். இதுல என்ன சிறப்பம்சம்னா, இந்த சீரியசில் 90களில் நடித்து பிரபலமான நடிகர் நடிகைகளை வைத்து தயாரிக்க போறதா கவிதாலயா நிறுவனம் அறிவிச்சிருக்காங்க.. அதுமட்டுமல்லாம இந்த சீரியஸ பிரபல ஓடிடி நிறுவனத்துல வெளியாக போகுது.

Nagma, Vinaya Prasad, Meena, Jyothika and Shalini: 5 successful actresses  of the 90's - IBTimes India

90களில் வந்த படங்கள எந்த காலத்துலமே மறக்க முடியாது, அப்போ நடிச்ச நடிகர், நடிகைங்க இப்போ புது சீரியஸா பார்க்கறதுல, ரசிகர்களை ரொம்பவே வெயிட் பண்ணிட்டிருக்காங்கனே சொல்லலாம்.

Views: - 211

0

0