திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி பண மோசடி செய்த ஆர்யா மீது ஜெர்மனி பெண் புகார் – பிரதமர், குடியரசுத்தலைவர் அலுவலங்களுக்கு பறந்த கடிதம்

1 March 2021, 4:36 pm
Quick Share

தமிழ் சினிமாவில் அந்த காலம் முதல் சாக்லேட் பாய் என்று கூறப்படும் அழகிய நடிகர்களுக்கு மவுசு அதிகம் இருந்து வந்தது. கமலஹாசன், அரவிந்த் சுவாமி, மாதவன், பிரசாந்த், சித்தார்த் தற்போது ஹரிஷ் கல்யாண் என பட்டியல் நீண்டு கொண்டே சென்றிருக்கிறது. அந்த வரிசையில் முக்கியமானவர் ஆர்யா.

உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் அமைதியான பையனாக அறிமுகமானவர், அதன்பின் அறிந்தும் அறியாமலும் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தினார். தொடர்ந்து வட்டாரம், பட்டியல், பாஸ் என்கிற பாஸ்கரன் என நடித்து தற்போது ரஞ்சித் இயக்கத்தில் சர்ப்பேட்டா பரம்பரை படத்தில் நடித்து வருகிறார். இவரை விட 17 வயது கம்மியான ஆயிஷாவை 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி ஆர்யா லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார் என்று ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். ஜெர்மனியில் வாழ்ந்து வரும் தமிழ் பெண்ணான விட்ஜா, சென்ற ஆண்டு லாக்டவுன் காலகட்டத்தில் ஆர்யா, “தனக்கு படவாய்ப்புகள் இல்லாததால் தான் கஷ்டத்தில் இருப்பதாகவும், தன்னை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியதாகவும் அந்தப்பெண் புகார் அளித்திருக்கிறார்.

மேலும் அவரிடம் இருந்து 70 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும் வாங்கியிருப்பதாக புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என சொல்வதோடு, கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்க மறுக்கிறார் என்று பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

தன்னை ஆர்யாவின் தாயார் திட்டிய ஆடியோ பதிவுகள், அந்த பணத்தை ஆர்யாவிற்கு அனுப்பியதற்கான ஆதாரம் ஆகியவை அந்த புகாரில் இணைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

Views: - 338

0

0