தமிழின் மிக பிரபலமான நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் “வெண்ணிலா கபடிக் குழு” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து “குள்ளநரி கூட்டம்”, “நீர் பறவை”, “ஜீவா”, “முண்டாசுப்பட்டி”, “ராட்சசன்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த விஷ்ணு விஷால் இதனிடையே 2010 ஆம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே காலப்போக்கில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில் 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இத்தம்பதிக்கு ஆர்யன் என்று ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டாவை விஷ்ணு விஷால் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர்கான், விஷ்ணு விஷால்-ஜ்வாலா குட்டா தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு மிரா என்று பெயர் சூட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
விஷ்ணு விஷாலின் சகோதரரான ருத்ரா “ஓஹோ எந்தன் பேபி” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விஷ்ணு விஷால், “நேற்று ஒரு ஸ்பெஷலான விஷயம் ஒன்று நடந்தது. ஆமிர்கான் சார் ஓஹோ எந்தன் பேபி படத்தை பார்த்தார். படம் பார்த்துவிட்டு கண்கலங்கிவிட்டார். ரிலேஷன்ஷிப் குறித்து இது போன்ற படங்கள் வருவது குறைந்துவிட்டது என கூறினார். படம் நன்றாக இருப்பதாக பாராட்டினார்” என பகிர்ந்துகொண்டுள்ளார்.
விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள “ஓஹோ எந்த பேபி” திரைப்படத்தில் ருத்ராவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் அஞ்சு குரியன், மிஷ்கின், ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால், ராகுல் ஆகியோர் இத்திரைப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறையின் கீழ் செயல்படும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும்…
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிலையில்…
சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் இந்திய உணவு டெலிவரி பணிகளில் கோலோச்சி வரும் நிலையில் நாமக்கல் பகுதியைச்…
பண மோசடி வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் பண மோசடியில் ஈடுபட்டதாக…
கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர் காந்தி நகரை சேர்ந்தவர் அப்துல் ஷா (வயது 48 ).…
மனதை கொள்ளைக்கொண்ட நிலா… 2011 ஆம் ஆண்டு சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த “தெய்வத்திருமகள்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர்…
This website uses cookies.