லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படம் குறித்தான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களும் ஏற்கனவே வெளிவந்து பட்டையை கிளப்பி வருகிறது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது. மேலும் இத்திரைப்படத்தின் Pre Release Event இன்று நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் தனது சமுக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அதாவது “கூலி” திரைப்படத்தின் Pre Release Event-ல் கலந்துகொள்வதற்காக ஆமிர்கான் வந்துள்ளார். அவர் விழா நடக்கும் இடத்திற்கு காரில் மாஸ் ஆக வந்திறங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. “கூலி” திரைப்படத்தில் ஆமிர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் ஆமிர்கானை வைத்து லோகேஷ் கனகராஜ் ஒரு புதிய திரைப்படத்தையும் இயக்கவுள்ளார்.
“கூலி” திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சௌபின் சாஹிர், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சென்சார் போர்டு “A” சான்றிதழ் அளித்துள்ளது. அந்த வகையில் இத்திரைப்படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக யூகிக்க முடிகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.