ஒன்று சேர்ந்த ஆரி பாலாஜி – மிட்சர் சாப்பிடும் ஷிவானி !

Author: Udayaraman
7 December 2020, 4:43 pm
Quick Share

நேற்று அனிதா அல்லது நிஷா வெளியே செல்வார்கள் என நினைத்து கொண்டிருக்கையில், Twist ஆக குறைவான ஓட்டுகள் பதிவான காரணத்தினால் சனம் வெளியே வந்துவிட்டார்.

மேலும் அவர் Big Boss வீட்டுக்கு வந்த நாள் முதல் எல்லோரிடமும் சண்டை போட்டு வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு வெளியே சென்று விட்டார். அந்த வகையில் அவர் வீட்டை விட்டு வெளியே போவதில் ஷோவுக்கு எந்த அளவுக்கு பலத்தை சேர்க்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அர்ச்சனாவின் விளையாட்டு தற்போது தான் ஆரிக்கு புரிந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரமோவில் . “நான் உனக்கு சொல்லும் விஷயம் என்ன வென்றால் உனக்கு ஷிவானி மேல் அன்பு இருக்கிறது. ஓகே ஆனால் அந்த அன்பால் கேம் கெட்டுவிடக்கூடாது. ஆனால் கேமை ஒழுங்காக விளையாடாமல் ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பு செலுத்தி விளையாடுகிறார்கள்” என்று அர்ச்சனா குரூப்பை கூறினார்.

இதற்கு பாலாஜி கூறிய போது “உங்களுக்கும் எனக்கும் ஒரு லெவலுக்கு மேல் பேச ஆள் இருக்காது. அதன் பிறகு தனியாக புலம்ப வேண்டியதுதான்” என்று கூற, இதனை அடுத்து ஆரி, “உனக்காவது ஷிவானி இருக்கா, எனக்கு யார் இருக்காங்க?” என்று கேட்க,

உடனே பாலா, ” கவலைப்படாதீர்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் ஷிவானியையும் பேக் பண்ணி அனுப்பி விடுவார்கள்” என்று ஒன்றிணையும் நேரத்தில் ச ஷிவானி உண்மையிலேயே மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

Views: - 44

0

0