10 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வெளிநாடுகளில் விளையாட உதவி செய்தார் நடிகர் அஜித் !
18 September 2020, 9:12 pmதல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் உதவி என்று வருபவர்களுக்கு இல்லை என்றே கூறுவது இல்லை.
இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று ஆலமரமாக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித். தான் செய்யும் உதவிகளை வெளியே தெரியாத அளவுக்கு செய்பவர். இன்று பிரபல நாளிதழ் செய்த அவள செயல் எல்லோருக்கும் தெரியும்.
அதை கண்டிக்கும் வகையில் மாற்று திறனாளி வீரர்களின் விளையாட்டு சங்கத் தலைவரான அமர் பிரசாத் அவர்கள், அஜித்துக்கு சாதகமாக ட்வீட் செய்துள்ளார்.”நடிகர் அஜித் தோற்றத்தில் மட்டுமல்ல குணத்திலும் பால்போல் வெள்ளை மனம் கொண்டவர்.
நான் தமிழக மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கத்தில் தலைவராக இருந்த இரண்டு வருடங்கள் சுமார் 10மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வெளிநாடுகளில் விளையாட உதவி செய்தார்.அவரை ஏளனமாகப் பேசுவது தவறு” என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.