படிக்காதவன் பட குட்டி ரஜினி திடீர் மரணம்.. இவர் சமுத்திரம் பட நடிகையின் கணவராச்சே..!

ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் இணைந்து நடித்த படிக்காதவன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்த விஷயம். இந்த படத்தில் குட்டி ரஜினி ஆக வந்த சிறுவனை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. ரஜினியின் இளம் வயதில் நடித்த அந்த சிறுவன் வேறு யாருமில்லை மாஸ்டர் சுரேஷ் தான். இவருடைய இயற்பெயர் சூரிய கிரன் மாஸ்டர் சுரேஷ் ரஜினி படங்கள் மட்டுமின்றி கமல், விஜயகாந்த், பிரபு, சிரஞ்சீவி, நாகர்ஜுனா, அமிதாப்பச்சன் உடன் இணைந்து மொத்தம் 200 படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், நடிகர் மாஸ்டர் சுரேஷ் சமுத்திரம் என்ற படத்தில் சரத்குமாருக்கு சகோதரியாக நடித்த காவிரியை திருமணம் செய்து கொண்டு, அதன் பின் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் பெற்றார். மேலும், மாஸ்டர் சுரேஷ் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சுஜாதாவின் அண்ணன் என்பது பலரும் அறிந்திடாத விஷயம்.

மாஸ்டர் சுரேஷ் என்ற பெயரில் சிறு வயதில் நடித்து வந்தாலும், சூர்ய கிரண் என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்ட இவர், பின்பு சில படங்களையும் இயக்கி இருந்தார். தற்போது, நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்து முடித்துள்ள அரசி என்ற திரைப்படத்தினை இயக்கி உள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், தற்போது உயிரிழந்து உள்ளார். முன்னதாக, நடிகர் சூரிய கிரண் சமீப காலமாக உடல்நிலை குறைவினால் அவதிப்பட்டு உள்ளார்.

மஞ்சள் காமாலை காரணமாக ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நோயின் தாக்கம் அதிகரித்ததால், வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருந்தநிலையில், நேற்று காலை 11 மணிக்கு உயிரிழந்து இருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது 48 வயதில் இயக்குனராக கலக்கிய சூர்ய கிரண் திடீரென உயிரிழந்துள்ளது திரைத்துறையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Poorni

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

8 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

9 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

10 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

11 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

11 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

11 hours ago

This website uses cookies.