ஒவியாவுக்கு அல்வா கொடுத்து, கெளதம் மேனன் ஹீரோயினை திருமணம் செய்த ஆரவ் ! வைரலாகும் ஃபோட்டோ !

6 September 2020, 3:34 pm
Quick Share

ஆரவ் முன்னாடி, ஓ காதல் கண்மணி, சைத்தான் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்சசியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓவியாவுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் மூலம் பிரபலமான ஆரவ் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது ராஜபீமா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


நரேஷ் சம்பத் இயக்கும் இந்த திரைப்படத்தில் ஆரவிற்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்து வருகிறார். மேலும் அவர்களுடன் நாசர், கேஎஸ் ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இத்தனை நாட்கள் பிரிந்திருந்த ஆரவ் ஓவியா தற்போது மீண்டும் இருவரும் இணைந்து விட்டார்கள் என செய்திகள் வந்தது ஆனால் அவையெல்லாம் பொய்யாகும் படி வேறு ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி விட்டார் நம்ம பிக் பாஸ் சீசன் 1 வின்னர் ஆரவ். இவர் மணந்துகொண்ட பெண் யார் என்றால், ஜோஷுவா இமை போல் காக்க படத்தில் கதாநாயகி ஆக நடிக்கும் ராஹே.

இவரின் கல்யாணத்திற்கு சினேகன், ஆர்த்தி, காயத்ரி ரகுராம், பிந்துமாதவி, சுஜா, ஹரிஷ் கல்யாண் என முக்கால்வாசி பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இதை பார்த்த ஓவியா ஆர்மி பொங்கி எழுந்து, ” தலைவியை Corner பண்ணிட்டாங்கடா” என்று புலம்பி வருகிறார்கள்.

Views: - 8

0

0