அரவிந்த்சாமியின் அழகில் மயங்காத பெண்களே கிடையாது என்று கூறும் அளவுக்கு எவர் கிரீன் ஹீரோவாக இன்றளவும் திகழ்ந்து வருகிறார். இவர் முன்னதாக பொழுதுபோக்கிற்காக மாடல் துறையில் நுழைந்தார். முதன்முதலாக இவர் நடித்த காபி விளம்பரத்தை பார்த்த இயக்குனர் மணிரத்தினம் தளபதி படத்தில் பெரிய ஸ்டாராக வலம் வந்த ரஜினியின் தம்பியாக நடிக்கும் அதிர்ஷ்டத்தை கொடுத்தார்.
இதனிடையே, ஆண் அழகன் அரவிந்த் சாமி சாக்லேட் பாய் ஆக பம்பாய் படத்தின் மூலமாக அத்தனை பெண் ரசிகர்களையும் வளைத்து போட்டார். இவர் 1991ம் ஆண்டு தளபதி படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். தொடர்ந்து ரோஜா, மின்சார கனவு, அலைபாயுதே, என் சுவாசக் காற்றே, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கதாபத்திரங்கள் தேர்வு செய்வதில் அதிகம் கவனம் செலுத்தும் அவர் வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. குறிப்பாக இவர் நடித்த ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது. இவர் காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு 16 வருடத்திற்கு பிறகு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு அபர்ணா முகர்ஜி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இவருக்கு ருத்ரா,ஆதிரா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், இவரது இரண்டாவது இன்னிங்ஸில் வில்லன் கதாபாத்திரத்திலும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் அரவிந்த்சாமி நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவை பொறுத்த வரையில், ஹீரோக்களும் கதாநாயகிகளும் சினிமாவில் இருந்து அரசியலில் களமிறங்கியது சகஜமான ஒன்றுதான். எம்ஜிஆர் தொடங்கி ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், பாக்யராஜ், கருணாஸ், கமல், குஷ்பூ, ரோஜா, நமிதா என எண்ணற்ற நபர்கள் சினிமாவிலிருந்து அரசியலில் களமிறங்கி இருக்கிறார்கள்.
அந்த வகையில், தற்போது விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். தற்போது, இவர் அரசியலில் களமிறங்கி தமிழக வெற்றி கழகம் என அவரது கட்சி பெயரையும் அறிவித்துள்ளார். இந்நிலையில், அரவிந்த்சாமி பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, ரஜினி ரசிகன் கமல் ரசிகன் விஜய் பிடிக்கும் என்கிற காரணத்தினால் ஓட்டு போடக்கூடாது. ஓட்டு போடவும் மாட்டேன். நடிகர்கள் சொல்லக்கூடிய விஷயங்களினால் சமூகத்தில் மாற்றங்கள் வருமா அவர்களால் அந்த மாற்றத்தை செய்ய முடியுமா? அவர்களின் கருத்து மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நடிகர் தான் ஆனாலும், அரசுக்கு திட்டங்களை தீட்டும் அளவிற்கு அவர்களுக்கு தகுதி இருக்கிறதா? என்பதை எப்படி நம்புவது, அரசியலில் களமிறங்கும் நடிகர்களுக்கு நல்ல எண்ணங்கள் இருக்கலாம்.
ஆனால், ஒரு மாநிலத்தை ஆளும் அளவிற்கு அவர்களுக்கு தகுதி இருக்கிறதா? ஒரு மாநிலத்தை ஆளக்கூடிய அளவிற்கு அவர்கள் இருக்கிறார்களா? அவர்களால் கண்டிப்பாக பண்ண முடியும், பண்ண முடியாது என்பதல்ல… ஆனால், தலைவராக அவர்களுக்கு கண்டிப்பாக ஏதாவது தெரிந்திருக்க வேண்டுமே என அரவிந்த்சாமி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகப்படியான மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நடிகரின் ரசிகர்களாக இருந்தால் மட்டும் அவருக்கு ஓட்டு போடுவது என்பது சரியாக இருக்காது என்பதே இந்த வீடியோவில் அவர் கூறும் கருத்தாக உள்ளது.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.