அந்தரங்க உறுப்பில் வெளியேறும் மாதவிடாய்.. தன்னை பற்றி பிரபல தமிழ் நடிகர் சொன்ன ஷாக்கிங் விஷயம்..!

நடிகர், தொகுப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக கலைஞராக திரையுலகில் வலம் வந்தவர் சக்கரவர்த்தி. சிறு சிறு கதாபாத்திரங்களில் திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ள சக்கரவர்த்தி, டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்படும் இவர், இடுப்புக்கு மேலே ஆணாகவும், இடுப்புக்கு கீழே பெண்ணாகவும் வாழ்ந்து வருகிறார்.

அதாவது, பொதுவாக லட்சத்தில் கோடியில் ஒருவருக்கு வரக்கூடிய அரிதான பிரச்னையாக ஒரே உடலில் ஆணாகவும் – பெண்ணாகவும் வாழ்ந்து வருகிறார் சக்கரவர்த்தி. இதனால் தாம் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். தமிழக அரசால் இடை பாலினத்தவர் என்ற சான்றிதழை பெற்றுள்ளார் சக்கரவர்த்தி. சக்கரவர்த்திக்கு பத்து வயது இருக்கும் போது, அவருடைய அந்தரங்க உறுப்பில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது.

இதனால் பயந்துபோன அவர், இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். காயம் ஏற்பட்டதால் இப்படி நடந்திருக்கலாம் என அவரும் இதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால், மாத மாதம் இவருக்கு இந்த பிரச்சனை தொடரவே, மருத்துவமனைக்கு சென்று சக்கரவர்த்தியை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் கூறிய விஷயம் இவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் அரிதான பிரச்சனையால் சக்கரவர்த்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஆணாக இருந்தாலும் அவருக்கு கர்ப்பப்பை உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு ஆண்மகனின் பருவ வயது மாற்றங்களும் இவருக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது, பொதுவான ஆண்களை போல விந்துவும் வெளியாகி அதன் உணர்வுகளும் உள்ளது, பெண்களுக்கு இருப்பது போல் கர்ப்பப்பையும் மாதவிடாய் பிரச்னைகளும் உள்ளது.

இவர் திருமண வயதை எட்டியபோது, ஆண் – பெண் என இவருக்கான உணர்வுகளோடு இடை பாலினமாக இருந்ததால், இவரின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டனர். மேலும் மாதவிடாய் மற்றும் சிறுநீர் பிரச்சனைகள் ஆகியவை கொண்டதால், தீவிர நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சக்ரவர்த்தி வலியால் துடித்துள்ளார். பின்னர் மருத்துவர்கள் அறிவுரையினால் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் இருந்ததால், ஆணுறுப்பையும் ஆபரேஷன் செய்து நீக்கிவிட்டார்களாம். தன்னை போல இடை பாலினமாக பிறந்து, பிரச்சனைகளை அனுபவித்து வருபவர்களுக்கு, ஆதரவாக பல்வேறு சமூக விழிப்புணர்வு வீடியோக்களை போட்டு வருகிறார் .

இவரை பற்றி தகவல் தெரிந்தவுடன் பலர் வாய்ப்பு தர மறுப்பதாகவும், இதனால் வறுமையில் வாடி வருவதாகவும் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இவருடைய நிலையை அறிந்த ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

19 minutes ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

2 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

2 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

3 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

4 hours ago

This website uses cookies.