இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு இந்தாண்டு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் Mission : Chapter 1 உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் வெற்றி மகுடம் சூட்டியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இந்தியா விடுதலை ஆகும் முன்னர் பிரிட்டிஷ் மற்றும் இந்தியர்களுக்கு நடந்த போர் குறித்து பீரியட் ஜானர் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ள தனுஷ் பிரிட்டிஷ் ராணுவத்தில் வேலை பார்க்கும் கேப்டன் மில்லர் கெட்டப்பில் ரொம்பவே இளமையாக நடித்து மாஸ் காட்டியுள்ளார் மேலும் இன்னும் இரண்டு கெட்டப்கள் ஆக்ஷனில் தெறிக்கும் என கூறப்படுகிறது. பிரிட்டிஷ் ராணுவத்தில் சேருவதையே தனது லட்சியமாக கொண்டுள்ள தனுஷ், அதில் சேர்ந்த பின்னர் அவரது வாழ்வில் நடக்கும் மாற்றங்கள் தான் “கேப்டன் மில்லர்” படத்தின் கதை.
பிரிட்டிஷ் ராணுவம் இந்திய மக்களை சித்ரவதை செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் உள்ளூர் மக்களுக்காக புரட்சியில் களமிறங்கும் தனுஷ் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார்.கடைசி 30 நிமிடங்கள் முழுக்க முழுக்க ஆக்ஷனில் தெறிக்கவிட்டுள்ளதாம். இதுவரை பார்த்திராத தனுஷை இந்த படத்தில் நிச்சயம் பார்க்கலாம் ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் படத்துக்கு பெரிய பலம். நடிகை பிரியங்கா மோகனின் கதை மிகவும் போல்டாக உள்ளதாம்.
இருந்தாலும் கேப்டன் முள்ளாய் காட்டிலும் மக்கள் இந்த பொங்கல் கொண்டாட்டத்தை மேலும் மகிழ்ச்சியாக கொண்டாடும்படி சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் கலகலப்பான படமாக உள்ளதால் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தியேட்டருக்கு படையெடுக்க வைத்துள்ளது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படம் முதல் நாளிலே ரூ.14 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் கேப்டன் மில்லர் படத்திற்கு கிடைத்துள்ள நிலையில் கண்டிப்பாக இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மேலும், படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி நிறுவனத்தின் TG தியாகராஜன் தனுஷுக்கு மாலை போட்டு பாராட்டி படத்திற்கு ப்ளாக் பஸ்டர் ஓப்பனிங் வசூல் கிடைத்திருக்கிறது என்றும் கூறி இருக்கிறார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.