தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர், திரையுலகிற்கு அறிமுகமானதில் இருந்தே பெரும்பாலும் ஹிட் படங்களையே கொடுத்து வருகிறார். இதன்மூலம், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து விட்டார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. அதனைத் தொடர்ந்து, கேப்டன் மில்லர், வாத்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார் முதலாவதாக வாத்தி திரைப்படம் வெகு விரைவிலேயே வெளிவர இருக்கிறது. அதோடு, பிரபல இயக்குனர் செல்வராகவனும் நடிகர் தனுஷும் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது பாகம் எடுக்க உள்ளனர்.
அடுத்தடுத்து படங்களில் நடிகர் தனுஷ் கமிட்டாகியிருக்கும் சூழலில், நடிகர் தனுஷ் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, திரையுலகில் நடிகர் தனுஷ் எத்தனையோ படங்களை தவற விட்டு உள்ளார் அதில் ஒரு சில திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன.
அந்த வகையில் சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2010 ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் நான் மகான் அல்ல. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது தனுஷ் தானாம் சில காரணங்களால் அவர் அந்த படத்தை தவறவிடவே கார்த்தி நடித்தார். படம் வெற்றி பெற்ற பிறகு தான் இப்படி பட்ட திரைப்படத்தை தவற விட்டுவிட்டோமே என ரொம்ப வருத்தப்பட்டதாக தற்போது சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.