தோனியை பாராட்டியதால் சிக்கலில் சிக்கிய தனுஷ்… டிரெண்டிங்கில் #நன்றிகெட்டஎழும்பன்_தனுஷ்!!

Author: Babu Lakshmanan
16 October 2021, 2:31 pm
dhanush - csk - updatenews360
Quick Share

சென்னை : 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியை பாராட்டியதால், நடிகர் தனுஷ் சிக்கலில் சிக்கிக் கொண்டார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முதலில் பேட் செய்த சென்னை அணி, டூபிளசிஸின் 86 ரன்கள் குவிக்க, 20 ஓவர்களுக்கு 192 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து, களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்த போதிலும், பின்னர் வந்த வீரர்கள் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், அந்த அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

csk champion - updatenews360

கடந்த சீசனில் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறிய போது கேப்டன் தோனி கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார். மேலும், வயது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் கூறி வந்தனர். இதனால், தோனி ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தில் இருந்தனர்.

இந்த சூழலில், கடந்த முறை தோல்விக்கு பிறகு, தோனி சொன்னதைப் போலவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும் எழுச்சியோடு இந்த சீசனைத் தொடங்கியது. தற்போது சாம்பியன் பட்டத்தை சென்னை அணி தட்டிச் சென்றதால், ரசிகர்கள் தோனியை தோளில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களில் சென்னை மற்றும் தோனி குறித்த கருத்துக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில்,சென்னை அணியின் ரசிகரான நடிகர் தனுஷ், சென்னை அணியின் கேப்டன் தோனியை பாராட்டிய விவகாரம், அஜித் ரசிகர்களிடையே எரிச்சலூட்டியுள்ளது. அதாவது, “காலில் ரத்தம் சொட்ட சொட்ட ஷேன் வாட்சன் விளையாடிய போட்டியை நியாபகப்படுத்துகிறது. டூபிளசிஸ், கெய்க்வாட், உத்தப்பா, ஜடேஜா மற்றும் One and only one தல எங்க தோனிக்கு விஷில் போடு,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தனுஷின் இந்த டுவிட் அஜித் ரசிகர்களிடையே கடும் ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தி விட்டது. அதாவது, திரையுலகில் ‘தல’ அஜித் இருக்கையில், எப்படி தோனியை தல என அழைக்கிறீர்கள், எனக் கேள்வி எழுப்பி, கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.

மேலும், #நன்றிகெட்டஎழும்பன்_தனுஷ் என்னும் ஹேஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர். இது தனுஷ் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 760

9

40