“நயன்தாராவுக்கு வாழ்க்கை கொடுத்ததே நான் தான்” – சுச்சி Leaks புகழ் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் !

14 June 2021, 2:25 pm
Quick Share

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் .

அவரது நடிப்பில் லேட்டஸ்ட் ஆக வந்த விஸ்வாசம், பிகில், மூக்குத்தி அம்மன் திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தர்பார் படம் சரியாக போகவில்லை. தற்போது அண்ணாத்த, அதுமட்டுமில்லாமல் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்னும் படத்தில் நடிக்கிறார்.

தற்போது விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு அடிக்கடி அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா. இதை கிண்டலடிக்கும் வகையில், நடிகர் கார்த்திக் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகிறது. அதில் “தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நான் ஒரு தியாகி, பொதுவாக அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர் என்றால் என்னை தான் கூப்பிடுவார்கள்.

அப்படி இருக்க, அந்த படத்தில் கடைசி வரை எனக்கு கல்யாணமே நடக்காது, ஷாலினி, லைலா, ராணிமுகர்ஜி ஆகியோர்களை நான்தான் தானம் செய்து இருக்கிறேன். அவ்வளவு ஏன், நயன்தாராவுக்கு இப்போது ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்துள்ளது என்றால் அதற்கு நான் தான் காரணம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Views: - 515

7

3