“முடிஞ்சா செய்யுங்க” – நடிகர் விஜய்-க்கே சவால் விட்ட மகேஷ் பாபு..!

10 August 2020, 1:44 pm
Quick Share

நடிகர் மகேஷ் பாபு, பசுமை இந்தியா சவாலில் தளபதி விஜய்க்கு சவால் விடுத்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகள்கள் என லட்சக்கணக்கானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய அளவில் அதிகமான ட்வீட்களைக் கொண்ட ஹேஷ்டேக் என்று #HBDMaheshBabu ஹேஷ்டேக் சாதனை புரிந்துள்ளது. தமிழில் கொடிகட்டி பறக்கும் நடிகர் விஜய், அஜித் உள்ளிட்ட பிரபலங்களின் பிறந்த நாள் ஹேஷ்டேக் சாதனையுடன் ஒப்பிடுகையில், நேற்று ஒரே நாளில் #HBDMaheshBabu ஹேஷ்டேக் 40 மில்லியனுக்கும் அதிகமான ட்வீட்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள் இடையே #GreenIndiaChallenge என்ற சவால் பிரபலமாகி வருகிறது. ஒருவர் மரக்கன்றை நட்டு அதனைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு, மேலும் மூவருக்கு அதை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே சவால். இந்த சவால், தற்போது தெலுங்கு திரையுலகில் இருந்து தமிழ் திரையுலகிற்கு தாவியுள்ளது.

பிறந்த நாளை கொண்டாடிய மகேஷ் பாபு #GreenIndiaChallenge-ல் பங்கேற்று, மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார். அதை வீடியோவாக எடுத்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், “எனது பிறந்த நாளைக் கொண்டாட இதைவிடச் சிறந்த வழி கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுக்கிறேன். இந்தச் சங்கிலி, எல்லைகளைக் கடந்து தொடரட்டும். இந்த நல்ல முயற்சிக்கு ஆதரவு தரும்படி உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்கிறேன். பசுமையான உலத்தை நோக்கி ஒரு அடி. இந்த முன்னெடுப்பைச் செய்யும் எம்.பி சந்தோஷ்குமாருக்கு நன்றி”. எனவும் அவரின் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இந்த சவாலை நடிகர் விஜய் ஏற்பாரா என்பது கேள்வியாக இருந்தாலும், அவரின் ரசிகர்கள் இதை முன்னெடுப்பார்கள் என்பது நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது. ஏன் என்றால், நல்ல காரியங்களுக்காக ஹேஷ்டெகை டிரெண்ட் செய்யுங்கள் என விஜய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 13

0

0