பிரபல கவர்ச்சி நடிகை மற்றும் ஈரம் ஆதியின் காதலியான நிக்கி கல்ராணிக்கு CORONA Positive…!
14 August 2020, 3:00 pmAll over South india -வில் முன்னணி நாயகியாக வலம் வந்து நிக்கி கல்ராணி, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கிறார், அது சரி இப்போது வீட்டில் இருக்கிறோம் என்பது வேற விஷயம். நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
கடந்த சில காலமாக ஈரம் பட நடிகர் ஆதியுடன் நிக்கி கல்ராணி காதலில் விழுந்து உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. இதை தொடர்ந்து, நேற்று தனக்கு Corona இருப்பது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ” எனக்கு Corona இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநேரத்தில் சீக்கிரமே நான் குணமாக வேண்டும் என கடவுளிடம் வேண்டும் என்னுடைய நண்பர்கள், ரசிகர்கள், உறவுகளுக்கு நன்றி” என பதிவிட்டு உள்ளார்.