தமிழ் சினிமா உலகில் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர், நடிகர் என பல திறமைகளை கொண்டவர் பார்த்திபன். இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் இரவின் நிழல். இப்படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
50 வயதாகும் ஒருவர் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், அதன் இருண்ட பக்கங்களை திரும்பிப் பார்ப்பது தான் படத்தின் கதை. இப்படம் உலகமெங்கும் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. இரவின் நிழல் படத்திற்கு சர்வதேச விருதுகள் குவிந்து வருகின்றது. இதையடுத்து பிரபலங்கள் பலரும் பார்த்திபனின் முயற்சியை பாராட்டி இருந்தார்கள். இந்நிலையில், சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன், நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் நடித்த வாரிசு, துணிவு படங்களை பற்றியும், அமைச்சரான உதயநிதி அவர்களை பற்றியும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார்.
அதில் அவர் கூறியதாவது `எனக்கு தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களை விட திரைப்பட விழாதான் என்னுடைய விழா. நான் இதுவரை 3 சர்வதேச விருதுகளை வாங்கிவிட்டேன் இருந்தாலும் எனக்கு விருதுகளின் மீதுள்ள ஆசை இனமும் போகவில்லை. இரவின் நிழல் திரைப்படம் இதுவரை 114 விருதுகளை வாங்கிவிட்டது, இந்நிலையில் தற்போது சென்னை சர்வதேச விழாவில் வெளியிடுவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கூறினார்.
சினிமாவில் விருது படங்கள் மற்றும் வர்த்தக படங்கள் என இரண்டு படங்கள் உள்ளன. இவற்றில் வர்த்தக படங்களுக்கு அதிக வருமானம் வரும் என்றும் பார்த்திபன் கூறினார். பின்னர், விஜய்யின் வாரிசு பட சர்ச்சையை பற்றி பேசிய பார்த்திபன், விஜய் போன்ற நடிகர்களுக்கு பிரச்சனை வந்தால் அவர்கள் நடித்த திரைப்படம் இன்னமும் ஹிட் அடிக்கும். அதோடு எல்லா பிரச்சனைகளையும் தாண்டி வெற்றியடைவதும் ஹீரோயிசம் தான். நான் “வாரிசு” படத்தை திரையரங்கில் முதலில் பார்ப்பேன் என்று சொல்வதற்கு “துணிவு” வேண்டும் என்று தன்னுடைய பணியில் பார்த்திபன் பேசியிருந்தார். மேலும் பெண்களின் சக்தி பற்றி ஒரு படம் எடுக்க பணிகள் நடந்து வருவதாக கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.