நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமானின் சண்டை தான் சினிமாவின் பரபரப்பான செய்தியாக பேசப்பட்டு வருகிறது. பிரபல இசையமைப்பாளர் டி. இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்.
அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று தடாலடியாக கூறினார். இவ்வளவு வெறுப்புக்கு என்ன காரணம் என கேட்டதற்கு… சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு தான் அவர் நல்ல மனிதர் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டே எனக்கு எதிரான வேலைகள் செய்துவந்ததை நான் தாமதமாக தான் புரிந்துக்கொண்டேன்.
எனக்கு ஏன் இப்படி துரோகம் செய்தாய்? என நான் பலமுறை கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இந்த இடத்தில் என்னால் சொல்லமுடியாது. இந்த ஊர் என்னை நல்லவன், கெட்டவன் என என்ன சொன்னாலும் பரவாயில்லை. எனக்கு தெரியும் நான் யார் என்று… என்னை படைத்தவனுக்கு தெரியும் நான் யார் என்று என ஆதங்கப்பட்டு பேசினார். டி. இமானின் இந்த பேச்சு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதையெல்லாம் வைத்து பார்த்தால் சிவகார்த்திகேயன் இமானின் முதல் மனைவி மோனிகாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. இமான் முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து எந்த ஒரு படத்திலும் சேர்ந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இமான் தன் மனைவியை விவாகரத்து செய்ய காரணமே சிவகார்த்திகேயன் தான் என செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக இமான் அந்த பேட்டியில்… சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகத்தை வெளியில் சொன்னால் என் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என கூறியது தான் அண்டர்லைன் செய்து பேசுகிறார்கள்.
இதனால் உண்மையிலே சிவகார்த்திகேயன் அவ்வளவு மோசமானவரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து இமானுக்கு பலர் அவருக்கு ஆதரவு கொடுத்து அவருக்கு ஆறுதல் அளித்து வருகிறார்கள். இதனால் மக்களுக்கு சிவகார்த்திகேயன் மீது ஒரு தவறான பிம்பம் விழுந்துள்ளது. அவர் வெகுளித்தனமாக இருப்பது போல் முகமூடி அணிந்து மிகவும் மோசமானவராக இருக்கிறார் என இமானே கூறியுள்ளதை மக்கள் கவனிக்க துவங்கியுள்ளனர். இதில் சிலர் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகவும் சிலர் இமானுக்கு ஆதரவாகவும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாகவே கூறி வ்ருகிறார்கள்.
அந்தவகையில் தற்போது நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், இமானுடன் சேர்ந்து தனது புது படத்தினை துவங்கியிருகிறார். அப்போது இமானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு,
வா’வென
வாய் பிளந்து
வரவேற்று
வாய் நனைய முத்தமிட்டு
இறுதிவரை இருக்க விரும்பி
இறுக அணைத்தாலும்…
திட்டமிட்டபடி
சட்டென விட்டு
வி ல கி
சென்றுவிடும்
சென்ற வினாடிகள் !!!
தும்பைப் பூவின் மீது
தூய்மையான
பனித்துளி படர்ந்து
தும்பிகளின் மெல்லிய ரீங்காரத்தைக் கூட
மெலோடியாய் ரசிக்கும் சில உறவுகளும்
பூப்பதுமுண்டு!
இசையை விட தூய்மையானது எது?
சென்ற படத்தில் ரகு மானுடன் இணைந்த நான்
வரும் படத்திலும் ஒரு மானுடன் இணைகிறேன்.
இம்மான் …. இமான்!
அபார ஞானமும்
அயராத உழைப்புமாய்
அடுத்தடுத்த மணிகளில் மனிதர் 5 பாடல்களை பிரசவித்தார்.இன்னும் இரண்டு கர்ப்பத்தில்.
மைனா’வின் குரல் போல் இவரின் இசையும் இனிமை.அன்றிலிருந்து அவரின் இசையும் ஒரு அன்றில் பறவையாய் என் ரசனை வானில் பறந்துக் கொண்டிருந்தது.
இனி…
இனிமை
இசையாய்…
Ok!
Tittle ?
அறிவிப்போம் விரைவில்! என கூறி இமானை வெகுவாக புகழ்ந்து பாராட்டியுள்ளார் நடிகர் பார்த்திபன். சிவகார்த்திகேயன் மீது இமான் மிகப்பெரிய குற்றசாட்டை வைத்திருக்கும் இந்த சமயத்தில் அதுகுறித்து பலர் பரபரப்பாக பேசிவரும் நேரத்தில் பார்த்திபனின் இந்த பதிவு சிவகார்த்திகேயனுக்கு எதிராக இருப்பதாக சிலர் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.