ISO முத்திரை பதித்த அழகான அம்மா நடிகை என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். தென்னகத்து மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கிலும் எல்லோருக்கும் அம்மாவாக நடித்து வருகிறார். இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்து ஆரம்பத்தில் 1980களில் ஹீரோயினாக திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
பின்னர் திருமணத்திற்கு பின்ன சில ஆண்டுகள் சினிமாவிற்கு கேப் விட்டிருந்த அவர் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் ஹீரோக்களின் அம்மா வேடத்தில், நடித்து பெரும் புகழ் பெற்றார். அப்படி அவர் அம்மாவாக நடித்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படங்கள் ராம், தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், களவாணி, வேலையில்லா பட்டதாரி, கிரீடம், தெனாவட்டு உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது.
இதனால் சரண்யா பொன்வண்ணன் சிறந்த அம்மா நடிகையாக பல விருதுகளை வாங்கியுள்ளார். மேலும் அவர் சினிமாவை தாண்டி தனக்கு பிடித்த டைலர் தொழில் செய்து வருகிறார். இவர் 1989ம் ஆண்டு நடிகரும் திரைப்பட இயக்குனருமான ராஜசேகர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவர் குடி பழக்கத்திற்கு அடிமையானதால் சரண்யாவுக்கு அவருடன் கருத்து வேறுபாடுஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
அதன் பின்னர் பெற்றோர் பார்த்து வைத்த பொன்வண்ணனை திருமணம் செய்துக்கொண்டார். கருத்தம்மா படத்தில் நடித்த போது பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த பொன்வண்ணனை சரண்யாவுடம் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்ததே பாரதி ராஜா தானாம். சரண்யாவின் பெற்றோரிடம் பேசி முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். பொன்வண்ணனை திருமணம் செய்த பிறகு வாழ்க்கையின் மகிழ்மையை உணர்ந்து வாழ்ந்து வரும் சரண்யாவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் இருவருமே மருத்துவர்கள்.
இந்நிலையில் சரண்யாவின் கணவர் பொன்வண்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது குடும்பம், மனைவி குறித்து பல விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். அப்போது நான் இதுவரை என் மனைவியை பெயர் சொல்லி கூட கூப்பிட்டதில்லை. அது எனக்கு பழக்கமும் இல்லை. சிறுவயதில் இருந்தே எல்லோரையும் வாங்க… போங்க என மரியாதையோடு பேசும் பழக்கம் தான். சின்ன குழந்தையாக இருந்தாலும் அப்படித்தான் பேசுவேன். எங்கள் வீட்டில் இருக்கும் பூனையை கூட வாங்க லியோ என்று தான் கூப்பிடுவேன் என நடிகர் பொன்வண்ணன் கூறியுள்ளார். அவரை இந்த பேச்சையும் நல்ல குணத்தையும் கண்ட பெண்கள் ” இப்படி ஒரு கணவன் கிடைக்க சரண்யா மேடம் நிச்சயம் ஏதேனும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என கருத்து கூறி வருகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.